மஹிந்திரா நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற XUV300 எஸ்யூவி காரில் குறைந்த விலை W2 ஆரம்ப நிலை வேரியண்ட் ரூ.8 லட்சத்திலும், கூடுதலாக W4 டர்போ பெட்ரோல் வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
1.2 லிட்டர் எம் ஸ்டாலின் என்ஜின், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் என மூன்று விதமான ஆப்ஷனை பெற்றதாக எக்ஸ்யூவி 300 விற்பனைக்கு கிடைத்து வருகின்றது.
2023 Mahindra XUV300
மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரில் உள்ள 1.5 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் 115 ஹெச்பி பவர், டார்க் 300 என்எம் வெளிப்படுத்தும். இதில் 6 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் கிடைக்கின்றது.
அடுத்து, 1.2லிட்டர் TCMPFI என்ஜின் 109 hp பவர் மற்றும் 200 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. 1.2-லிட்டர் TGDi டர்போ பெட்ரோல் என்ஜின் 129 hp பவர் மற்றும் 230 Nm டார்க் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் 6 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் கிடைக்கின்றது. இப்பொழுது W4 வேரியண்டிலும் சன்ரூஃப் வழங்கப்பட்டுள்ளது.
XUV300 காரின் டாப் வேரியண்டில் 7 ஏர்பேக்குகள், 4 டிஸ்க் பிரேக்குகள், முன் மற்றும் பின் பார்க்கிங் சென்சார், சன் ரூஃப், 17 அங்குல டைமன்ட் கட் அலாய் வீல் போன்றவை உள்ளது.
W2, W4, W6 W8, மற்றும் W8 (O). W2 வேரியண்ட் ஆனது 1.2 லிட்டர் TCMPFI பெட்ரோல் என்ஜினில் மட்டும் கிடைக்க உள்ளது.
2023 Mahindra XUV300 price list
XUV300 Price (ex-showroom) | ||||||
Variant | Petrol | Turbo Diesel | ||||
l.2 L TCMPFI | 1.2 L Turbo petrol TGDi | l.2 L TCMPFI | I.5L | |||
Manual | AutoShift | Manual | AutoShift | |||
W2 | ₹ 7.99 Lakh | |||||
W4 | ₹8.65 Lakh | ₹ 9.29 Lakh | ₹ 10.20 Lakh | |||
W6 | ₹ 9.99 Lakh | ₹ 10.49 Lakh | ₹ 10.69 Lakh | ₹ 10.99 Lakh | ₹ 12.29 Lakh | |
W8 | ₹ 11.49 Lakh | ₹ 11.99 Lakh | ₹ 12.99 Lakh | |||
W8 (O) | ₹12.59 Lakh | ₹ 12.99 Lakh | ₹ 13.29 Lakh | ₹ 13.91 Lakh | ₹ 14.59 Lakh |