மஹிந்திரா & மஹிந்திரா குழுமத்தின் எலக்ட்ரிக் எஸ்யூவி வரிசையில் வரவிருக்கும் XUV.e9 கூபே ரக எலக்ட்ரிக் எஸ்யூவி மாடல் சோதனை ஓட்டத்தில் ஈடுபடும் வெளியாகியுள்ளது. தோற்ற அமைப்பில் முன்பாக காட்சிப்படுத்தப்பட்ட எக்ஸ்யூவி. இ9 கான்செப்ட் போலவே உள்ளது.
ஏற்கனவே மஹிந்திரா கொண்டு வரவுள்ள Born எலக்ட்ரிக் மற்றும் XUV.e வரிசைகளில் வரவுள்ள கார்களில் வெளியீடு தொடர்பான காலத்தை வெளியிட்டுள்ளது.
கூபே ரக ஸ்டைலை கொண்ட மாடல் ஏப்ரல் 2025 விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற XUV.e9 தற்போதுள்ள எந்த பெட்ரோல் மாடலுக்கும் எலெக்ட்ரிக் இணை அல்ல, ஆனால் கூபே போன்ற வடிவமைப்புடன் முற்றிலும் புதிய வாகனமாக XUV.e9 பரிமாணங்கள் 4,790 மிமீ நீளம், 1,905 மிமீ அகலம் மற்றும் 1,690 மிமீ உயரம் என மஹிந்திரா வெளிப்படுத்தியுள்ளது.
XUV.e9 மாடல் 5 இருக்கைகள் கொண்ட மாடல் 2,775 மிமீ வீல்பேஸைக் கொண்டிருக்கும். இந்த மாடலும் INGLO பிளாட்ஃபாரத்திலே வரவுள்ளதால் 60-80kwh பேட்டரியை பெற்று 230hp மற்றும் 350hp என இரு விதமான பவரை வெளிப்படுத்துவதுடன் 400-500 கிமீ-க்கு கூடுதலான ரேஞ்சு வெளிப்படுத்தலாம்.
சோதனை ஓட்டத்தில் உள்ள எக்ஸ்யூவி.இ9 மாடலின் இன்டிரியர் டாஷ்போர்டின் முழு அகலத்திலும் மூன்று டிஜிட்டல் திரைகள் இருப்பது உறுதியாகியுள்ளது. சமீபத்திய மஹிந்திரா கார்களில் காணப்படும் மூன்று-ஸ்போக்கிற்கு மாறாக இரண்டு-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் உள்ளதை கவனிக்கலாம்.