நடப்பு ஜனவரி மாத இறுதியில் வரவுள்ள மஹிந்திரா நிறுவனத்தின் புதிய 2024 ஆம் ஆண்டிற்கான XUV400 எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலின் EL புரோ வேரியண்ட் தொடர்பான படங்கள் இணையத்தில் முதன்முறையாக வெளியாகியுள்ளது.
முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட இன்டிரியரை பெறுகின்ற XUV400 ஆனது 10.25 அங்குல மிதக்கும் வகையிலான கிளஸ்ட்டரை பெறுகின்றது.
2024 Mahindra XUV400
வரவுள்ள புதிய மாடலின் தோற்ற அமைப்பில் பெரிதாக மாற்றமில்லாமல் அமைந்திருப்பதுடன் எல்இடி ஹெட்லைட் உள்ளிட்ட அம்சங்களை தொடர்ந்து மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் எக்ஸ்யூவி 400 காரின் இண்டிரியரில் எக்ஸ்யூவி 700 காரில் உள்ளதை போன்ற ஸ்டீயரிங் வீல் கொடுக்கப்பட்டு டூயல்-டோன் பெற்று புதிய 10.25-இன்ச் மிதக்கும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு மேம்பட்ட HVAC சுவிட்சுகள் மற்றும் டூயல் ஜோன் ஏசி கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர மற்றபடி வேறு எந்த மாற்றங்களும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகின்றது.
148 hp பவர் மற்றும் 310 Nm டார்க் உடன் 34 kWh பேட்டரி பெற்று அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜ் மூலம் 250 கிமீ ரேஞ்ச், கூடுதலாக வரவுள்ள 39.4 kwh பேட்டரி மூலம் சிங்கிள் சார்ஜ் மூலம் 290 கிமீ வெளிப்படுத்துகின்றது. டாப் வேரியண்டில் 6 ஏர்பேக்குகள் மட்டும் பெறுகின்றது.
7.2kW சார்ஜரை பயன்படுத்தினால் 0-100% சார்ஜ் செய்ய 6 மணிநேரம் எடுக்கும். 2024 மஹிந்திரா எக்ஸ்யூவி 400 விலை ரூ.16 லட்சத்தில் துவங்கலாம். டாடா நெக்ஸான் EV LR, எம்ஜி இஜட்எஸ் EV மற்றும் ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் ஆகியவற்றுடன் போட்டியிட உள்ளது.
image source yt- yash9w