Car News விரைவில்., மஹிந்திரா தார் சிக்னேச்சர் எடிசன் அறிமுகம் Last updated: 12,June 2019 6:47 pm IST MR.Durai Share Mahindra Thar Signature Editionதார் எஸ்யூவி காரின் அடிப்பபடையில் வரவிருக்கும் மஹிந்திரா தார் சிக்னேச்சர் எடிசன் என்ற பெயரில் 70 ஆண்டு கால கொண்டாடத்தை நினைவுப்படுத்தும் வகையில் பல்வேறு வசதிகளை கொண்டதாக 700 கார்களை விற்பனைக்கு வெளியாக உள்ளது.அடுத்த தலைமுறை தார் எஸ்யூவி சோதனை செய்யப்பட்டு வரும் நிலையில், 70 ஆண்டுகால மஹிந்திரா CJ3A ஆஃப் ரோடரை நினைவுக்கூறும் வகையில் ஸ்பெஷல் எடிசன் மாடலை மஹிந்திரா அக்வா மெரைன் நிறத்தில் 700 கார்களை மட்டும் விற்பனை செய்ய உள்ளது.மஹிந்திரா தார் எஸ்யூவிதற்போது விற்பனையில் உள்ள மாடலில் இடம்பெற்றுள்ள 2.5 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்ட சிக்னேச்சர் எடிசன் மாடல் அதிகபட்சமாக 105 bhp பவர் மற்றும் 247 Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த என்ஜின் 5 வேக கியர்பாக்ஸ் கொண்டு 4×4 டிரான்ஸ்ஃபெர் கேஸ் கொண்டிருக்கும் வாய்ப்புகள் உள்ளது.மராஸ்ஸா காரில் உள்ள அக்வா மெரைன் நிறத்தை பெற்று வரவுள்ள சிக்னேச்சர் எடிசன் மாடலின் வலது புற ஃபென்டரில் மஹிந்திரா தார் பேட்ஜ் பதிக்கப்பட்டு மஹிந்திராவின் தலைவர் ஆனந்த மஹிந்திரா கையெழுத்திடப்பட்டுள்ளது. சில்வர் நிறத்தை பெற்ற புதிய பம்பர், முந்தைய தலைமுறை ஸ்கார்ப்பியோ காரில் இடம்பெற்றிருந்ததை போன்ற அலாய் வீல் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது.ஏபிஎஸ் பிரேக் உட்பட இன்டிரியரில் புதிதான லெதேரெட் இருக்கை கவர் போன்றவற்றுடன் 700 கார்கள் அடுத்த சில வாரங்களில் ரூ.9.80 லட்சத்தில் விற்பனைக்கு கிடைக்கலாம்.image credit : 4×4 india/facebook TAGGED:MahindraMahindra Thar Share This Article Facebook Previous Article இந்தியாவில் மூன்று ஸ்கூட்டர்களை வெளியிட்ட 22 கிம்கோ Next Article பிஎஸ்6 மாருதி ஸ்விஃப்ட் விற்பனைக்கு வெளியானது