Car News புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி காரின் விலை எதிர்பார்ப்புகள் ? Last updated: 28,September 2020 12:32 pm IST MR.Durai Share வரும் அக்டோபர் 2ஆம் தேதி விலை அறிவிக்கப்பட உள்ள இரண்டாம் தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி காருக்கான முன்பதிவு அன்றைய தினமே துவங்கப்படுகின்றது.முந்தைய மாடலை விட முற்றிலும் மேம்பட்ட காராக வந்துள்ள தார் எஸ்யூவி காரில் இப்போது பெட்ரோல் மற்றும் டீசல் என இரு இன்ஜின் ஆப்ஷன்களை பெறுவதுடன் AX மற்றும் LX என இரு விதமான வேரியண்ட் ஆப்ஷனில் வழங்கப்பட உள்ளது.முதன்முறையாக தார் எஸ்யூவி காரில் பெட்ரோல் என்ஜின் இணைக்கப்பட்டுள்ளதால் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளை பெட்ரோல் ரசிகர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. 2.0 லிட்டர் Mstallion பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 150 ஹெச்பி பவர் மற்றும் 320 என்எம் டார்க் வெளிப்படுத்தும். 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் என இரு விதமான ஆப்ஷனை பெறுகின்றது.2.2 லிட்டர் எம் ஹாக் டீசல் என்ஜின் பெறும் தார் காரில் அதிகபட்சமாக 130 ஹெச்பி பவர் மற்றும் 300 என்எம் டார்க் வெளிப்படுத்தும். 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் என இரு விதமான ஆப்ஷனை பெறுகின்றது.மேலும் அனைத்து வேரியண்டிலும் மேனுவல் ஷிஃப்ட் 4×4 டிரான்ஸ்ஃபர் கேஸ் வழங்கப்பட்டுள்ளது. மஹிந்திரா தார் எஸ்யூவி விலை எவ்வளவு ? இரண்டாம் தலைமுறை மஹிந்திரா எஸ்யூவி விலை ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சத்திற்குள் அமையலாம். web title: new Mahindra Thar SUV price expectation – Auto news in Tamil TAGGED:Mahindra Thar Share This Article Facebook Previous Article புதிய டூ வீலரை வெளியிடும் சுசூகி மோட்டார் சைக்கிள் Next Article நாளை வரவுள்ள ஹோண்டா ஹைனெஸ் பைக்கின் எதிர்பார்ப்புகள்