புதிய லோகோ பற்றி பிரதாப் போஸ் கூறுகையில், “காட்சி அடையாள மாற்றத்தின் பின்னணியில் உள்ள யோசனை, விடுதலையான உணர்வை வெளிப்படுத்துவதாகும். நீங்கள் விரும்பும் இடத்திற்கு நீங்கள் செல்லலாம், முழுமையான ஸ்டைல், கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்புடன், உங்கள் உலகத்தை உங்களுடன் எடுத்துச் செல்லும் அரத்தம் கொண்டதாக அற்புதமான புதிய சகாப்தம் உருவாகும் போது இது ஒரு புதிய புத்துணர்வை கொண்டு வருகிறது. லோகோவில் உள்ள 2M என்ற திடமான பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு விரிவான மற்றும் அற்புதமான எதிர்காலத்தைக் குறிக்கிறது.
தற்போது நடைமுறையில் உள்ள லோகோ தொடர்ந்து வர்த்தக வாகனங்களில் இடம்பெறும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இனிவரும் புதிய எஸ்யூவி கார்கள் மற்றும் டீலர்கள் உட்பட அனைத்திலும் விரைவில் லோகோ மாற்றப்பட உள்ளது.
புதிய மஹிந்திரா லோகோ XUV700 காரில் அறிமுகமாகும், இது இந்த வார இறுதியில் உலகளாவிய அறிமுகத்துக்கு வரவுள்ளது. மேலும், சிறப்பு எடிசன் மாடல் ஒன்றை தங்கம் வென்ற இந்திய ஒலிம்பிக் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு வழங்க உள்ளதாக ஆனந்த மஹிந்திரா தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.