நவம்பர் 26ல் விற்பனைக்கு வரவுள்ள மஹிந்திரா நிறுவனத்தின் புதிய XEV 9e மற்றும் BE 6e என இரண்டு மாடல்களிலும் INGLO பிளாட்பாரத்தில் அடிப்படையாகக் கொண்டு இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷனை பெரும் என்பதை அதிகாரப்பூர்வமாக மஹிந்திரா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
குறிப்பாக இந்த INGLO பிளாட்பார்ம் மிகவும் பாதுகாப்பானதாகவும் அதே நேரத்தில் உறுதியான கட்டுமானத்தை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதுடன், BYD நிறுவனத்தின் பிளேடு செல்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள LFP முறை பேட்டரி கொண்டுள்ளதால் மிக சிறப்பான ரேஞ்ச் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக இன்குளோ பிளாட்ஃபாரத்தை பற்றி குறிப்பிட்ட இந்நிறுவனம் பிளாட்பாரம் மிகச் சிறப்பான வகையில் வடிவமைக்கப்பட்டு பிரேக் பை ஒயர், செமி ஆக்டிவ் சஸ்பென்ஷன் என பலவற்றைக் கொண்டிருப்பதனால் போட்டியாளர்களுக்கு மிகக் கடும் சவாலினை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளது.
59 kWh மற்றும் 79 kWh LFP பேட்டரி பெற உள்ள XEV 9e மற்றும் BE 6e மாடல்களில் 20-80 % சார்ஜிங் பெற 175KW DC ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் வெறும் 20 நிமிடங்கள் போதுமானதாக இருக்கும் என உறுதிப்படுத்தியுள்ளது.
பின்புற ஆக்சிலில் பொருத்தப்பட்ட உள்ள மோட்டார் 170Kw முதல் 210kW ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கும் என கூறப்பட்டுள்ள நிலையில் AWD மாடல்களின் விபரம் தற்பொழுது வெளியாகவில்லை. முழுமையான விபரங்களை அடுத்த சில நாட்களில் அறிந்து கொள்ளலாம்.