இந்தியாவில் முன்னணி 3PL சொலிசன் வழங்குபவர்களான மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம், கேரளாவில் உள்ள தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் போக்குவரத்துக்காக எலெக்ட்ரிக் வாகனங்களை ஏற்பாடு செய்துள்ளது.
இதற்காக இ-வெரிட்டோ செடான்களை இந்த நிறுவனம் பயன்படுத்துகிறது. இது மகேந்திரா எலெக்ட்ரிக் மொபைலிட்டி லிமிடெட்களின் இருந்து பெறப்பட்டது. இந்த வாகனங்கள் முதல் முறையாக இந்த பணிக்காக பயன்படுத்தப்படுகிறது. இதுமட்டுமின்றி அடுத்த வர்த்தக ஆண்டுகளுள் தங்கள் வாடிக்கையாளர்கள் உள்ள பெங்களுரு, டெல்லி போன்ற நகரங்களில் 150 கார்களை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து பேசிய மகேந்திரா எலெக்ட்ரிக் உயர்அதிகாரி மகேஷ் பாபு தெரிவிக்கையில், எலெக்ட்ரிக் மொபைலிட்டிக்காக எங்கள் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனங்கள் பத்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகின்றன. கேரளாவில் முதல் முறையாக இ-வெரிட்டோ கார்களை பயன்படுத்த தொடங்கியுள்ளது. இதன் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவது, அதிகரிக்கும் என்ற முழுமையான நாகல் நம்புகிறோம் என்றார்.
மகேந்திரா இ-வெரிட்டோ கார்கள் 5 பேர் கொண்டதாகவும், முழு சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் 110 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். மேலும் இந்த காரில் 72V 3-பேஸ் AC இண்டேக்ஷ்ன் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இவை 41bhp ஆற்றலுடனும் 3500rpm கொண்டிருக்கும். உச்சபட்ட பீக்கில் 91Nm டார்க்யூவில் இதன் ஆற்றல் 3000rpm ஆக இருக்கும். இந்த காரின் புட் கேப்பாசிட்டி 510 லிட்டர் கொண்டதாக இருக்கும். இந்த காரின் டாப் ஸ்பீட் 86kmph-ஆக இருக்கும்.