மாருதி சுசூகி நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலாக வரவிருக்கும் eVX கான்செப்ட் அடிப்படையிலான மாடல் இந்தியா மட்டுமல்லாமல் சுசூகி நிறுவனம் ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது.
குஜராத்தில் உள்ள சுசூகி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட உள்ள eVX எஸ்யூவி மாடலுக்கான பேட்டரி மற்றும் மோட்டார் உள்ளிட்ட முக்கிய பாகங்கள் உள்நாட்டிலே தயாரிக்கப்பட உள்ளது.
Maruti Suzuki eVX
இந்தியாவில் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டு வரும் புதிய இவிஎக்ஸ் கான்செப்ட் நிலை எலக்ட்ரிக் எஸ்யூவி கார் தொடர்பாக சமீபத்தில் சென்னையில் ஆட்டோகார் புரபெஷனல் இதழ் நடத்திய இந்தியா இவி மாநாட்டில் பேசிய மாருதி சுஸுகியின் கார்ப்பரேட் விவகாரங்களின் நிர்வாக இயக்குனர் ராகுல் பார்தி கூறுகையில், “இறக்குமதி செய்யப்பட்ட பேட்டரி மற்றும் மோட்டார் கொண்ட மாடலை அறிமுகப்படுத்தினால் மட்டும் போதாது. எனவே, எங்களின் திட்டம் என்னவென்றால், ஒரு EV மாடலை வெளியிடும்போது, உள்நாட்டில் தயாரிக்கப்பட வேண்டும். எனவே நாங்கள் எங்களின் EV காரில் பேட்டரி மற்றும் மோட்டார் உருவாக்க உள்ளோம், நாங்கள் இந்தியாவில் இருந்து எலக்ட்ரிக் மாடலை ஏற்றுமதி செய்ய உள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள eVX எலக்ட்ரிக் காரின் வெளிப்புற தோற்றம் கான்செப்ட் நிலையில் இருந்து பெறப்பட்டுள்ளது. ஆனால் நுட்பவிபரக் குறிப்புகள் எதுவும் தற்பொழுது வெளியிடப்படவில்லை.
அனேகமாக, புதிய மாருதி சுசூகி EV காரில் 60kWh பேட்டரி பேக் கொண்டு முழுமையான சார்ஜில் 500 கிமீ வரையிலான ரேஞ்ச் பெற்றிருக்க வாய்ப்புகள் உள்ளது.