130 யூனிட்டுகள் மட்டும் தயாரிக்கப்பட உள்ள லோட்டஸ் எவியா (Lotus Evija) எலெக்ட்ரிக் ஹைப்பர் கார் அதிகபட்சமாக 2000 hp குதிரைத்திறன் வெளிப்படுத்துகின்றது. உலகின் மிகவும் சக்திவாய்ந்த உற்பத்தி நிலை சாலை காராக எவியா விளங்குகின்றது.
லோட்டஸ் எவிஜா (Evija pronounced ‘E-vi-ya’) என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டாலும் எவியா என்பதே இதன் உச்சரிப்பு முறையாகும். பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த லோட்டஸ் கார் நிறுவனம், தயாரித்துள்ள இந்த கார் முழுமையான எலெக்ட்ரிக் காராக விளங்குகின்றது. நான்கு எலெக்ட்ரிக் மோட்டார் கொண்ட இந்த காரில் ஒவ்வொரு மோட்டாரும் 500 ஹெச்பி பவரை வெளிப்படுத்துகின்றது.
லோட்டஸ் எவியா சிறப்புகள்
மிகவும் சக்திவாய்ந்த எலெக்ட்ரிக் எவியா காரில் மிட் என்ஜின் ஸ்போர்ட்ஸ் கார் மாடலான தோற்றத்துடன் வில்லியம்ஸ்அட்வான்ஸ்டு என்ஜினியரிங் முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஃபார்முலா E பந்தயங்களை பின்னணியாக கொண்ட இலகுரக பேட்டரி பேக் கொண்டுள்ளது. எவியா 1680 கிலோ எடையை கொண்டு சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 400 கிலோமீட்டர் தொலைவு பயணிக்கும் திறனை பெற்றதாக இந்த மாடல் விளங்குகின்றது.
இந்த கார் வெறும் 3 வினாடிகளுக்கு குறைவான நேரத்தில் 0 – 100 கிமீ வேகத்தை எட்டிவிடும் என்பதுடன் மணிக்கு 320 கிமீ வேகம் வரை எட்டும் திறனுடன் இந்த எலெக்ட்ரிக் கார் வந்துள்ளது.
ஏரோடைனமிக்ஸ் திறனுடன் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள எவியா காரில் ஃபார்முலா ஒன் பந்தய கார்களில் இடம் பெற்றுள்ளதை போன்ற வகையிலான ஸ்டீயரிங் வீல் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இரண்டு இருகைகளை பெற்ற இந்த மாடலில் அல்காண்ட்ரா லெதர் இருக்கைகள் கொண்டுள்ளது. ரேஞ்ச், சிட்டி, டூர், ஸ்போர்ட் மற்றும் டிராக் என பல்வேறு விதமான டிரைவிங் மோடுகளை பெற்றுள்ள ஸ்டீயரிங் வீல் மூலமாகவே கட்டுப்படுத்த இயலும்.
எவியா மின்சார ஹைப்பர் காரில் 350kW சார்ஜர் வாயிலாக வெறும் 12 நிமிடங்களில் 80 சதவீதம் அளவுக்கு பேட்டரியில் சார்ஜ்ங் திறனை பெறவும், 18 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிடலாம். அடுத்த வழங்கப்பட்டுள்ள 800kW சார்ஜர் மூலம் 9 நிமிடங்களில் சார்ஜிங் செய்யும் திறனுடன் வழங்கப்பட்டுள்ளது.
பினின்ஃபரீனா பேடிஸ்ட்டா எலெக்ட்ரிக் ஹைப்பர் கார் மற்றும் ரிமேக் கான்செப்ட் 1 மாடல்களுக்கு போட்டியாக லோட்டஸ் எவியா ஹைப்பர் கார் விளங்குகின்றது.