இங்கிலாந்தின் லோட்டஸ் கார் நிறுவனம், தனது எலட்ரா சூப்பர் எலக்ட்ரிக் எஸ்யூவி மாடல் அதிகபட்சமாக 600 கிமீ ரேஞ்சு வழங்குகின்ற மாடல் விற்பனைக்கு ரூ.2.55 கோடியில் வெளியாகியுள்ளது. 0-100 கிமீ வேகத்தை எட்ட வெறும் 2.9 வினாடிகள் எடுத்துக் கொள்ளுகின்றது.
EPA ஹைபிரிட் மெட்டரியல் கொண்டதாக தயாரிக்கப்பட்டுள்ள காரில் சிறப்பான ஏக்டிவ் ஏரோடைனமிக்ஸ் கொண்டதாக விளங்குகின்றது.
Lotus Eletre
Eletre (611 hp & 710Nm ), Eletre S (611 hp 710Nm ), மற்றும் Eletre R (918 hp 985Nm) என மூன்று விதமாக கிடைக்கின்ற இந்த மாடலில் 112kWh kWh பேட்டரி பொருத்தப்பட்டு பவரை வழங்க 800 வோல்ட் சிஸ்டம் கொண்டுள்ளது.
குறைந்த பவரை வெளிப்படுத்தும் இரண்டு வேரியண்டுகளும் 600 கிமீ ரேஞ்சு, அதிகபட்ச பெர்ஃபாமென்ஸ் வழங்குகின்ற டாப் எலட்ரா ஆர் வேரியண்ட் 490 கிமீ ரேஞ்சு வழங்குகின்றது.
Lotus Eletre |
Lotus Eletre S |
Lotus Eletre R |
|
Power (PS) |
603PS |
603PS |
905PS |
Torque (Nm) |
710Nm |
710Nm |
985Nm |
Battery Capacity |
112kWh |
112kWh |
112kWh |
WLTP-claimed Range |
600km |
600km |
490km |
0-100kmph |
4.5 seconds |
4.5 seconds |
2.95 seconds |
Top Speed |
258kmph |
258kmph |
265kmph |
ஆல்-வீல் டிரைவ் மற்றும் ஆக்டிவ் ஏர் சஸ்பென்ஷன் ஆனது. மூன்று வகைகளும் 112kWh பேட்டரியை கொண்டு விரைவான சார்ஜரைப் பயன்படுத்தி 20 நிமிடங்களில் 10-80 சதவிகிதம் சார்ஜ் செய்ய முடியும். இது 22kWh AC சார்ஜரை ஸ்டாண்டர்டாக பெறுகின்றது. இந்த மாடல் 350kW DC சார்ஜரை ஆதரிக்கின்றது.
மிக நேர்த்தியான க்ராஸ்ஓவர் எஸ்யூவி ஸ்டைலை பெற்றுள்ள இந்த எலக்ட்ரிக் காரில் 15.1 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது.
Louts Eletre Price list
லோட்டஸ் Eletre – ₹ 2.55 கோடி
லோட்டஸ் Eletre S – ₹ 2.75 கோடி
லோட்டஸ் Eletre R – 2.99 கோடி
(எக்ஸ்-ஷோரூம் இந்தியா)