இங்கிலாந்தின் பிரசத்தி பெற்ற ஸ்போர்ட்டிவ் கார் தயாரிப்பாளரான லோட்டஸ் கார்ஸ் நிறுவனத்தின் சூப்பர் கார் நவம்பர் 9 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. Emira, Eletre, Evija மற்றும் Emeya என 4 மாடல்களை கொண்டுள்ளது.
இந்நிறுவனத்தின் கடைசி ICE என்ஜின் பெற்ற மாடலாக எவிஜா விளங்குகின்றது. இங்கிலாந்தை தலைமையிடமாக லோட்டஸ் கொண்டிருந்தாலும் சீனாவின் கீலி (Geely) நிறுவனத்தின் கீழ் செயல்படுகின்றது.
Lotus Cars
டெல்லியில் முதல் டீலரை துவங்க உள்ள லோட்டஸ் நிறுவனம், முதல் மாடலாக எமிரா ஸ்போர்ட்ஸ் கார் அல்லது எலிட்ரா எலக்ட்ரிக் எஸ்யூவி என இரண்டில் ஒன்றை விற்பனைக்கு CBU முறையில் ரூ.3 கோடி விலையில் வெளியிடலாம்.
எமிரா ஸ்போர்ட்ஸ் காரில் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி நிறுவன 360 bhp பவர் மற்றும் 430 Nm டார்க் வெளிப்படுத்தும் 2.0-லிட்டர் டர்போசார்ஜ் பொருத்தப்பட்டிருக்கும். 400 bhp மற்றும் 420 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற 3.5-லிட்டர் சூப்பர்சார்ஜ் செய்யப்பட்ட V6 பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது.
ஒருவேளை எலிட்ரா எலக்ட்ரிக் எஸ்யூவி 905 bhp பவரை வழங்கும் டூயல் மோட்டார் பெற்று ஆல்-வீல் டிரைவ் எலக்ட்ரிக் பவர் டிரெயின் வெளிப்படுத்துகின்றது. 3 வினாடிகளில் 0-100 kmph எடுத்துக் கொள்ளும். முழுமையான சிங்கிள் சார்ஜ் மூலம் 600 கிமீ (WLTP) வரை செல்லும்.