ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் புதிய டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவி மாடல் கூடுதலான வசதிகள் பெற்றதாக மேம்படுத்தப்பட்டு விலை ரூ.67.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் விலை) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஜேஎல்ஆர் நிறுவன Pivi Pro ஆப்ரேட்டிங் சிஸ்டம் பெற்றுள்ள 11.4 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மூலம் பல்வேறு கனெக்ட்டிவ் வசதிகள் உடன் மீடியா, காலநிலை மற்றும் வழிசெலுத்தல் போன்ற முக்கிய வாகனக் கட்டுப்பாடுகள் மற்றும் செயல்பாடுகளுக்கு ஏற்ற அம்சங்கள் உள்ளன.
Land Rover Discovery Sport
7 இருக்கை பெற்ற உயர் ரக டைமனிக் SE வேரியண்ட் மட்டும் பெறுகின்ற லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்டில் இன்ஜின் விருப்பங்களைப் பொறுத்தவரை, 245 bhp மற்றும் 365 Nm டார்க்கை உருவாக்கும் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின், அடுத்து 201 bhpபி மற்றும் 430 Nm டார்க்கை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின், இரண்டும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. .
வெளிப்புற தோற்ற அமைப்பில் பெரிதாக மாற்றமில்லாமல், சிறிய அளவில் பம்பர் மற்றும் கிரில் அமைப்பு புதுப்பிக்கப்பட்டுள்ளது. உட்புறத்தில் புதுப்பிக்கப்பட்ட இன்டிரியருடன் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, பிரத்யேக ரியர் வியூ மிரர் டிஸ்ப்ளே, ஸ்டீயரிங்-மவுண்டட் பேடில் ஷிஃப்டர், 40:20:40 ஸ்பிளிட்-ஃபோல்டிங் ஃபங்ஷனுடன் சாய்ந்திருக்கும் மற்றும் பின்புற இருக்கைகள் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் உள்ளிட்ட 360 டிகிரி கேமரா அம்சம் இடம்பெறுள்ளது.
இந்திய சந்தையில் கிடைக்கின்ற மெர்சிடிஸ்-பென்ஸ் GLC, பிஎம்டபிள்யூ X3, ஆடி Q5, வால்வோ XC60 ஆகியவற்றை லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எதிர்கொள்ளுகின்றது.