0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு அதிகபட்சமாக 2.9 விநாடிகளும், 0 முதல் 200 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 9.0 விநாடிகளும் மட்டும் எடுத்துக் கொள்ளும்.
இந்த காரில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள Lamborghini Dinamica Veicolo Integrata (LDVI) சிஸ்டம் அடிச்சட்டத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மிக சிறப்பான டிரைவிங் டைனமிக்ஸ் வெளிப்படுத்தும் வகையில் ஆசிலேரேஷன், ரோல்ஓவர் தடுக்க முக்கிய பங்காற்றுகின்றது. சிறப்பான டார்க் மேம்டுத்தும் வகையிலான அம்சத்துடன் கூடிய ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்தை பெற்றுள்ளது.
ஹூராகேன் எவோ காரின் முன் மற்றும் பின்புற பம்பர்களை புதுப்பித்து இரட்டை சைலன்சருடன் வந்துள்ளது. இந்த காரின் இன்டிரியரில் 8.4 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் வந்துள்ளது. உயர்தரமான இருக்கைகள் உட்பட பல்வேறு ஆடம்பர வசதிகளை பெற்று விளங்குகின்றது.
லம்போர்கினி ஹூராகேன் EVO காரின் விலை ரூ. 3.73 கோடி ஆகும்.