கியா நிறுவனத்தின் மற்றொரு நான்கு மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட எஸ்யூவி மாடலாக வரவுள்ள கியா சிரோஸ் மாடலானது மிகச் சிறப்பான வகையில் டால்பாய் வடிவமான டிசைன் அமைப்பை கொண்டிருப்பதினால் மற்ற 4 மீட்டருக்கு குறைவான நீளம் கொண்டவற்றில் இருந்து மாறுபட்டதாக அமைந்திருப்பது உறுதி ஆகியுள்ளது. ஏற்கனவே, பல்வேறு டீசர்கள் வெளியாகி இருந்த நிலையில் அதில் பல தகவல்கள் வெளியாகி உள்ளன.
சிரோஸ் எஸ்யூவி காரில் வாய்ஸ் கண்ட்ரோல் மூலமாக இயங்கும் வகையிலான மிகப்பெரிய பனரோமிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா வசதி, 6 ஏர்பேக்குகள், லெவல் 2 ADAS மூலம் பல்வேறு உயர் தர பாதுகாப்பு வசதிகள் கொண்டிருக்கும் என உறுதியாகியுள்ளது.
சிரோஸ் முதற்கட்டமாக 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் என மொத்தமாக மூன்று எஞ்சின் ஆப்ஷனில் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் 3,995 மிமீ நீளம் பெற்றிருப்பது உறுதியாகியுள்ளது.
அறிமுகம் டிசம்பர் 19ஆம் தேதி மேற்கொள்ளப்பட உள்ள நிலையில் அநேகமாக ஜனவரி 17 ஆம் தேதி நடைபெற உள்ள பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ அரங்கில் விலை அறிவிக்கப்பட்ட அதனை தொடர்ந்து டெலிவரி வழங்கப்படலாம்.