வரும் டிசம்பர் 19ஆம் தேதி வியா நிறுவனத்தின் புதிய சிரோஸ் வெளியிடப்பட உள்ள நிலையில் பல்வேறு டீசர்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில் காம்பேக்ட் ஸ்டைலில் மிக தாராளமான இடவசதி வழங்கும் எஸ்யூவி மாடலாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏற்கனவே இந்திய சந்தையில் கியான் நிறுவனம் குறைந்த விலையில் சொனெட் மற்றும் C-செக்மென்ட் பிரிவில் செல்டோஸ் என இரண்டு மாடல்களை விற்பனை செய்து வருகின்ற நிலையில, புதிய சிரோஸ் அறிமுகம் செய்யப்படலாம். அதே நேரத்தில் மற்ற இரண்டு எஸ்யூவிகளையும் சாராமல் தனித்துவமான வடிவமைப்பினை பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வாய்ஸ் கண்ட்ரோல் மூலமாக இயங்கும் வகையிலான பனரோமிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா, 6 ஏர்பேக்குகள், லெவல் 2 ADAS உள்ளிட்ட வசதிகளை பெறக்கூடும்.
ICE மற்றும் எலெக்ட்ரிக் என இரண்டிலும் எதிர்பார்க்கப்படுகின்ற சிரோஸ் முதற்கட்டமாக 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் என மொத்தமாக மூன்று எஞ்சின் ஆப்ஷனில் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அறிமுகம் டிசம்பர் 19ஆம் தேதி மேற்கொண்டாலும் கூட விற்பனைக்கு அநேகமாக ஜனவரி மாதத்தில் நடைபெற உள்ள பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ அரங்கில் விலை அறிவிக்கப்பட்ட அதனை தொடர்ந்து டெலிவரி வழங்கப்படலாம்.