4 மீட்டருக்கு குறைந்த நீளமுள்ள எஸ்யூவிகளில் மாறுபட்ட உயரமான வடிவமைப்பினை கியா சிரோஸ் எஸ்யூவி காரில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டின் மைலேஜ் விபரங்களை ARAI மூலம் சோதனை செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
சிரோஸ் எஸ்யூவி காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 120 PS பவர், 178 Nm டார்க்கினை வெளிப்படுத்துகின்ற மாடலின் மைலேஜ் விபரம்,
6 வேக மேனுவல் மைலேஜ் லிட்டருக்கு 18.2 கிமீ மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் மைலேஜ் லிட்டருக்கு 17.68 கிமீ என ARAI சான்றிதழ் வழங்கியுள்ளது.
1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ள சிரோஸ் மாடலில் 116 PS பவர், 250 Nm டார்க்கினை வெளிப்படுத்துகின்ற மாடலின் மைலேஜ்,
6 வேக மேனுவல் மைலேஜ் லிட்டருக்கு 20.75 கிமீ மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் மைலேஜ் லிட்டருக்கு 17.65 கிமீ என ARAI சான்றிதழ் வழங்கியுள்ளது.
வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி கியா சிரோஸின் விலையை அறிவிக்க உள்ளது.