இந்தியாவில் கியா நிறுவனத்தின் புதிய சிரோஸ் எஸ்யூவி மாடலுக்கான முன்பதிவு ஜனவரி 3, 2025 முதல் துவங்குகிறது. முன்பதிவு கட்டணமாக ரூபாய் 25 ஆயிரம் வசூலிக்கப்படும் நிலையில் விலை பிப்ரவரி 1 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
4 மீட்டருக்கும் குறைந்த நீளம் கொண்ட காம்பேக்ட் எஸ்யூவி சந்தையில் சற்று மாறுபட்ட வித்தியாசமான டால்பாய் எஸ்யூவி வடிவமைப்பினை கொண்டிருக்கின்ற சிரோஸ் மாடலுக்கு போட்டியாக சொனெட், புதிய ஸ்கோடா கைலாக், எக்ஸ்யூவி 3XO, நெக்ஸான், பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ளுகின்றது.
120PS பவரை வெளிப்படுத்துகின்ற 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 116 PS பவர், 250 Nm டார்க்கினை 1.5 லிட்டர் டீசல் என இரண்டு விதமான எஞ்சின் ஆப்ஷனுடன் 6 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.
HTK, HTK (O), HTK+, HTX, HTX+, மற்றும் HTX (O) என ஆறு விதமான வேரியண்டினை பெற்று டாப் வேரியண்டில் 30 அங்குலத்தில் அகலமான டிரின்ட்டி டிஸ்பிளே, பனரோமிக் சன்ரூஃப், 6 ஏர்பேக்குகள்,LEVEL-2 ADAS பாதுகாப்பு தொகுப்பு மற்றும் பின்புற இருக்கைகளுக்கு வென்டிலேசன் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
ரூ.9 லட்சத்தில் எதிர்பார்க்கப்படுகின்ற கியா சிரோஸ் டெலிவரி பிப்ரவரி மாத மத்தியில் துவங்க உள்ளது.