இந்தியாவில் கியா வெளியிட்டுள்ள 4 மீட்டருக்கு குறைந்த நீளமுள்ள சிரோஸ் எஸ்யூவி மாடலில் HTK, HTK (O), HTK+, HTX, HTX+, மற்றும் HTX (O) என மொத்தமாக 6 விதமான வேரியண்டுகளில் உள்ள முக்கிய வித்தியாசங்களை அறிந்து கொள்ளலாம்.
பொதுவாக சிரோஸ் அனைத்து வேரியண்டிலும், பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் 6 ஏர்பேக்குகள், ஆன்டி-லாக் பிரேக் சிஸ்டம், பிரேக்ஃபோர்ஸ் அசிஸ்ட் சிஸ்டம், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், நிலைப்புத்தன்மை மேலாண்மை, ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் கண்ட்ரோல், முன் பார்க்கிங் சென்சார்கள், பின்புற பார்க்கிங் சென்சார்கள், வேகத்தை உணரும் ஆட்டோ கதவு பூட்டுகள், முன் மற்றும் பின் அனைத்து இருக்கை 3-புள்ளி சீட் பெல்ட்கள் நினைவூட்டல், ISOFIX (பின் ஆங்கர்கள்) போன்றவை உள்ளது.
Syros HTK
ஆரம்ப நிலை சிரோஸ் HTK வேரியண்டில் 1.0 பெட்ரோல் உடன் 6 வேக மேனுவல் பெற்று,
- ஹாலஜென் ஹெட்லேம்ப்
- 15-இன்ச் ஸ்டீல் வீல் உடன் வீல் கவர்
- சுறா ஃபின் ஆண்டெனா
- கருப்பு மற்றும் சாம்பல் டூயல்-டோன் உட்புறம்
- தோல் இருக்கைகள்
- 4.2-இன்ச் எம்ஐடி
- 12.3-இன்ச் HD தொடுதிரை
- 4 ஸ்பீக்கர்கள்
- வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே
- ஸ்டீயரிங் வீல் பொருத்தப்பட்ட ஆடியோ கட்டுப்பாடுகள்
- டைனமிக் வழிகாட்டுதல்களுடன் ரியர் வியூ கேமரா
- C-டைப் USB சார்ஜர் (முன்னிலும் பின்புறத்திலும் தலா இரண்டு)
- டில்ட் அட்ஜஸ்ட் ஸ்டீயரிங்
- ஆர்ம்ரெஸ்ட் & கப் ஹோல்டர்களுடன் சென்டர் கன்சோல்
- பின்புற பெஞ்ச் வகை இருக்கை
- முன்பக்க பயணிகள் சரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட்
- சென்ட்ரல் லாக்கிங் கொண்ட ரிமோட் கீ
- இரவும் பகலும் IRVM
- மின்சாரம் சரிசெய்யக்கூடிய ORVMகள்
- மேனுவல் ஏசி
- பின்புற ஏசி வென்ட்கள்
Syros HTK (O)
ஆரம்ப நிலை சிரோஸ் HTK வேரியண்டின் வசதிகளுடன் கூடுதலாக 1.0 பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் உடன் 6 வேக மேனுவல் பெற்று,
- மின்சார சன்ரூஃப்
- 16-இன்ச் கிரிஸ்டல் கட் அலாய் வீல்கள் (டீசல் மட்டும்)
- 15-இன்ச் ஸ்டீல் வீல்கள் (பெட்ரோல் மட்டும்)
- டிரைவர் இருக்கை அட்ஜெஸ்ட் வசதி
- ரூஃப் ரெயில்கள்
Syros HTK+
சிரோஸ் HTK(O) வேரியண்டில் 1.0 பெட்ரோல் உடன் 6 வேக மேனுவல், ஆட்டோமேட்டிக் மற்றும் 1.5 லிட்டர் டீசல் உடன் 6 வேக மேனுவல் பெற்று,
- 16-இன்ச் கிரிஸ்டல் கட் அலாய் வீல்கள்
- பெடல் விளக்குகள்
- டூயல் பேன் பனோரமிக் சன்ரூஃப்
- மின்ட் நிறத்துடன் கூடிய கிளவுட் ப்ளூ & கிரே டூயல் டோன் உட்புறம்
- கிளவுட் ப்ளூ & கிரே செமி லெரெட் இருக்கைகள்
- கீலெஸ் என்ட்ரி
- பின்புற டிஸ்க் பிரேக்குகள் (பெட்ரோல்-DCT மட்டும்)
- ஃபாலோ-மீ-ஹோம் ஹெட்லேம்ப்ஸ் (பெட்ரோல்-டிசிடி மட்டும்)
- டிரைவ் மோட் – Eco, Normal, Sport (பெட்ரோல்-DCT மட்டும்)
- டிராக்ஷன் முறைகள் – Sand/ Mud/ Snow
- முன்புறத்தில் ஆர்ம்ரெஸ்ட் மற்றும் உள்ளிழுக்கும் கப் ஹோல்டர்
Syros HTX
சிரோஸ் HTK+ வேரியண்டில் உள்ள வசதிகளுடன் 1.0 பெட்ரோல் உடன் 6 வேக மேனுவல், ஆட்டோமேட்டிக் மற்றும் 1.5 லிட்டர் டீசல் உடன் 6 வேக மேனுவல் பெற்று,
- LED ஹெட்லேம்ப் உடன் DRL
- எல்இடி டெயில் லேம்ப்கள்
- கிளவுட் ப்ளூ மற்றும் கிரே லெதரெட் இருக்கைகள்
- டூயல்-டோன் லெதரெட் மூடப்பட்ட ஸ்டீயரிங், கியர் நாப்
- ரிமோட் விண்டோஸ் மேல்/கீழ்
- முன் காற்றோட்டமான இருக்கைகள்
- பின்புற வைப்பருடன் வாஷர்
- அனைத்து விண்டோக்களும் டச் தானாக மேலே/கீழே
- ஆட்டோ ஹோல்டுடன் கூடிய மின்சார பார்க்கிங் பிரேக் (பெட்ரோல் DCT மட்டும்)
Syros HTX+
சிரோஸ் HTX வேரியண்டில் உள்ள வசதிகளுடன் 1.0 பெட்ரோல் உடன் ஆட்டோமேட்டிக் மற்றும் 1.5 லிட்டர் டீசல் உடன் ஆட்டோமேட்டிக் பெற்று,
- 17-இன்ச் அலாய் வீல்கள்
- ஸ்போர்ட்டி அலாய் பெடல்கள்
- 64 வண்ண சுற்றுப்புற மூட் லைட்டிங்
- 12.3 இன்ச் HD தொடுதிரை
- நேவிகேஷன் காக்பிட்
- 12.3-இன்ச் HD டிஸ்ப்ளே இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்
- ஏர் கண்டிஷனர் கட்டுப்பாட்டுக்கான 5-இன்ச் டச் ஸ்கிரீன்
- ஹர்மன் கார்டன் பிரீமியம் 8 ஒலிபெருக்கிகள் ஒலி அமைப்பு
- கியா கனெக்ட் 2.0
- ஸ்மார்ட்போன் வயர்லெஸ் சார்ஜர்
- 4-வே பவர் டிரைவர் இருக்கை
- பின்புற டிஸ்க் பிரேக்குகள்
Syros HTX (O)
சிரோஸ் HTX+ வேரியண்டில் உள்ள வசதிகளுடன் 1.0 பெட்ரோல் உடன் ஆட்டோமேட்டிக் மற்றும் 1.5 லிட்டர் டீசல் உடன் ஆட்டோமேட்டிக் பெற்று,
- நிலை 2 ADAS உடன் 16 வசதிகள்
- 360 டிகிரி கேமரா
- ரியர் வியூ மானிட்டர்