பிரசத்தி பெற்ற காம்பேக்ட் எஸ்யூவி சந்தையில் நுழைந்துள்ள கியா சொனெட் (Kia Sonet) எஸ்யூவி காரின் ஆரம்ப விலை ரூ.6.71 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.11.99 லட்சம் வரை விலை நிர்ணையிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற ஹூண்டாய் வென்யூ, மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி 300 மற்றும் வரவுள்ள டொயோட்டா அர்பன் க்ரூஸர், நிசான் மேக்னைட் இறுதியாக ரெனோ கைகெர் போன்ற மாடல்களை நேரடியாக எதிர்கொள்ளுகின்ற சொனெட்டில் மொத்தம் மூன்று இன்ஜின் ஆப்ஷன் கொடுக்கப்பட்டு டெக் லைன் மற்றும் ஜிடி லைன் என இருவிதமான பிரிவில் மொத்தமாக 17 விதமான மாறுபட்ட வேரியண்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
கியா சொனெட் விலை பட்டியல்
Kia Sonet prices (ex-showroom, India) | |||||
1.2P MT | 1.0P iMT | 1.0P DCT | 1.5D MT | 1.5D AT | |
HTE | Rs 6.71 | – | – | Rs 8.05 lakh | – |
HTK | Rs 7.59 lakh | – | – | Rs 8.99 lakh | – |
HTK+ | Rs 8.45 lakh | Rs 9.49 lakh | Rs 10.49 lakh | Rs 9.49 lakh | Rs 10.39 lakh |
HTX | – | Rs 9.99 lakh | – | Rs 9.99 lakh | – |
HTX+ | – | Rs 11.65 lakh | – | Rs 11.65 lakh | – |
GTX+ | – | Rs 11.99 lakh | Rs 12.89 lakh | Rs 11.99 lakh | Rs 12.89 Lakh |
சொனெட் காரின் இன்ஜின் ஆப்ஷன்
ஹூண்டாயின் வென்யூ காரில் உள்ள இன்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்ற கியா சொனெட்டில் இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என மூன்று இன்ஜின் பெற்று மேனுவல், டிசிடி, ஆட்டோ மற்றும் ஐஎம்டி என மாறுபட்ட கியர்பாக்ஸ் ஆப்ஷன்களை கொண்டுள்ளது.
ஒவ்வொரு இன்ஜினும் வழங்குகின்ற பவர் மற்றும் டார்க் உட்பட ARAI அளித்த மைலேஜ் சான்றிதழ் விபரமும் பின்வரும் அட்டவனையில் முழுமையாக தொகுக்கப்பட்டுள்ளது.
1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் | 1.2 லிட்டர் பெட்ரோல் | 1.5 லிட்டர் டீசல் | |
பவர் | 120PS | 83PS | 100PS/ 115PS |
டார்க் | 172Nm | 115Nm | 240Nm/ 250Nm |
கியர்பாக்ஸ் | 6-speed iMT/ 7-speed DCT | 5-speed MT | 6-speed MT/ 6-speed AT |
மைலேஜ் | 18.2km/l (iMT)/18.3km/l(DCT) | 18.4 km/l | 24.1km/l (MT)/19km/l(AT) |
கியா சொனெட் காரின் பவர்ஃபுல்லான இன்ஜினாக 120ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 172 என்எம் டார்க் வழங்குவதுடன் 6 வேக ஐஎம்டி கியர்பாக்ஸ் மற்றும் 7 வேக டிசிடி மட்டுமே பெறுகின்றது. இந்த மாடலில் மேனுவல் கியர்பாக்ஸ் இல்லை.
1.5 லிட்டர் டீசல் இன்ஜின் கொண்ட மேனுவல் கியர்பாக்ஸ் பெற்ற மாடல் 100 ஹெச்பி பவர் மற்றும் 240 என்எம் டார்க் வழங்குவதுடன் fixed-geometry-turbo நுட்பத்தை கொண்டு 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. அடுத்தப்படியாக, 6 வேக டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் மாடல் variable-geometry பெற்று 115 ஹெச்பி பவர் மற்றும் 250 என்எம் டார்க் வழங்குகின்றது.
இறுதியாக, குறைந்த பவரை வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்று 83ஹெச்பி பவர் மற்றும் 115என்எம் டார்க் வழங்குகின்றது.
இந்த மாடலில் ஈக்கோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் என மூன்று விதமான டிரைவிங் மோடு கொடுக்கப்பட்டுள்ளது. டிராக்ஷன் கன்ட்ரோல் அமைப்பினை பொறுத்தவரை , Snow, Mud மற்றும் Sand கொடுக்கப்பட்டுள்ளது.
இன்டிரியர் வசதிகள்
சோனெட் காரின் மிக நேர்த்தியான டேஸ்போர்டில் 10.25 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு UVO கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களில் 57க்கு அதிகமான வசதிகள் உள்ளன. ஆட்டோமேட்டிக் ஏசி வென்ட் கொடுக்கப்பட்டு, சென்டர் ஆர்ம் ரெஸ்ட், 7 ஸ்பீக்கர்களுடன் போஸ் சவுன்ட் சிஸ்டம், கோவிட்-19 வைரஸ் உட்பட கிருமிகளை தடுப்பிற்கான காற்று சுத்திகரிப்பு, டயர் பிரஷர் மானிட்டர், சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜிங் ஆப்ஷன், ரியர் பார்க்கிங் சென்சார் உள்ளிட்ட அம்சங்கள் கவனிக்கவேண்டியதாகும்.