கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சிறிய காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடல் சோனெட் காரின் மைலேஜ் விபரம் வெளியாகியுள்ளது. விற்பனையில் உள்ள வென்யூ எஸ்யூவி காரை விட கூடுதலான மைலேஜ் வழங்கும் வகையில் மேம்பாடுகளை கியா வழங்கியுள்ளது.
சமீபத்தில் முன்பதிவு துவங்கப்பட்ட சோனெட்டின் முதல் நாள் முன்பதிவு எண்ணிக்கை 6526 கடந்து சாதனை படைத்துள்ள நிலையில், 4 மீட்டருக்கு குறைவான நீளம் பெற்ற எஸ்யூவிகளுக்கு கடும் போட்டியாக அமைந்துள்ளது.
சோனெட்டில் இரண்டு பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் கொண்டுள்ள இந்த காரில் 120 HP குதிரைத்திறன் மற்றும் 172 Nm முறுக்குவிசை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் உடன் 7 வேக DCT ஆட்டோமேட்டிக் மற்றும் புதிதாக வரவுள்ள ஐஎம்டி கியர்பாக்ஸ் தேர்வும் கிடைக்க உள்ளது. டர்போ-பெட்ரோல் மைலேஜ் லிட்டருக்கு 18.2 கிமீ ஐஎம்டி மற்றும் 18.3 கிமீ (ஆட்டோமேட்டிக்) ஆகும்.
83 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 115 என்எம் முறுக்குவிசை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கும். 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மைலேஜ் லிட்டருக்கு 18.4 கிமீ மேனுவல் ஆகும்.
1.5 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் அதிகபட்சமாக 115 ஹெச்பி (ஆட்டோமேட்டிக்), 100 ஹெச்பி (மேனுவல்) மற்றும் 240 என்எம் (ஆட்டோமேட்டிக்), 250 என்எம் (மேனுவல்) வெளிப்படுதுகின்றது. மேலும், 6 வேக மேனுவல் தவிர காம்பேக்ட் எஸ்யூவி பிரிவில் முதன்முறையாக கியா சோனெட் டீசல் காரில் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற உள்ளது.
கியா சொனெட் டீசல் மைலேஜ் லிட்டருக்கு 24.1 கிமீ மேனுவல் மற்றும் 19 கிமீ (ஆட்டோமேட்டிக்) ஆகும்.
1.0-litre turbo-petrol | 1.2-litre petrol | 1.5-litre diesel | |
பவர் | 120PS | 83PS | 100PS/ 115PS |
டார்க் | 172Nm | 115Nm | 240Nm/ 250Nm |
கியர்பாக்ஸ் | 6-speed iMT/ 7-speed DCT | 5-speed MT | 6-speed MT/ 6-speed AT |
மைலேஜ் | 18.2km/l (iMT)/18.3km/l(DCT) | 18.4 km/l | 24.1km/l (MT)/19km/l(AT) |
மேலும் வாசிக்க – டெக் லைன் Vs ஜிடி லைன் வித்தியாசாங்கள் ? கியா சோனெட்
சில குறிப்பிடதக்க வசதிகள்
- தொடுதிரை இனோஃபோடெயின்மென்ட் சிஸ்டம் 10.25-அங்குல (26.03 செ.மீ) எச்டி
முறையில் வழங்குகிறது. - வைரஸ் தடுப்புடன் காற்றினை தூய்மைப்படுத்தும் வசதி
- போஸ் பிரீமியம் 7 ஸ்பீக்கர் ஆடியோ உடன் சப் ஊபர்
- காற்றோட்டமான ஓட்டுநர் இருக்கை மற்றும் முன் பயணிகள் இருக்கைகள்
- சவுண்டிற்கு ஏற்ப எல்இடி மூட் லைட்டிங்
- ஆட்டோ ஸ்டார்ட் செய்ய ரிமோட் இன்ஜின்
- UVO Connect மற்றும் ஸ்மார்ட் கீ
- ஓவர்-தி-ஏர் (OTA) மேப் அப்டேட்ஸ்
- மல்டி டிரைவ், டிராக்ஷன் மோட்ஸ் ஆட்டோமெட்டிக் மாடல்களுக்கு கிரிப்
கன்ட்ரோல் - கூலிங் பங்ஷன், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர்