ஆந்திர பிரதேசத்தில் அமைந்துள்ள அனந்தப்பூர் கியா மோட்டார்ஸ் இந்தியா ஆலையில் செப்டம்பர் 18 ஆம் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள சொனெட் எஸ்யூவி காரின் உற்பத்தி துவங்கப்பட்டுள்ளது. சொனெட்டின் விலை ரூ.6.99 லட்சம் முதல் ரூ.12.99 லட்சத்தில் வெளியாகலாம்.
சொனெட் எஸ்யூவி காருக்கான முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில் ரூ.25,000 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகின்றது. டெக் லைன் மற்றும் ஜிடி லைன் என இரு விதமான பிரிவுகளில் வரவுள்ள இந்த காரின் போட்டியாளர்களாக ஹூண்டாய் வென்யூ, விட்டாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், மஹிந்திரா எக்ஸ்யூவி300, டாடா நெக்ஸான் மற்றும் வரவுள்ள டொயோட்டா அர்பன் க்ரூஸர் போன்றவற்றை எதிர்கொள்ள உள்ளது.
வாடிக்கையாளர்களுக்கான கார் உற்பத்தி துவங்கப்பட்டுள்ளதால் விலை அறிவிக்கப்பட்ட உடன் விநியோகத்தை இந்நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ள சோனெட் காரினை 70 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய கியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சொனெட் இன்ஜின் விபரம்
பிஎஸ்-6 ஆதரவை பெற்ற ஹூண்டாய் வென்யூ காரில் இடம்பெற்றுள்ள அதே இன்ஜின் ஆப்ஷனை கியா பெறுகின்றது. 120 HP குதிரைத்திறன் மற்றும் 172 Nm முறுக்குவிசை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் உடன் 7 வேக DCT ஆட்டோமேட்டிக் மற்றும் புதிதாக வரவுள்ள ஐஎம்டி கியர்பாக்ஸ் தேர்வும் கிடைக்க உள்ளது. டர்போ-பெட்ரோல் மைலேஜ் லிட்டருக்கு 18.2 கிமீ ஐஎம்டி மற்றும் 18.3 கிமீ (ஆட்டோமேட்டிக்) ஆகும்.
83 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 115 என்எம் முறுக்குவிசை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கும். 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மைலேஜ் லிட்டருக்கு 18.4 கிமீ மேனுவல் ஆகும்.
1.5 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் அதிகபட்சமாக 115 ஹெச்பி (ஆட்டோமேட்டிக்), 100 ஹெச்பி (மேனுவல்) மற்றும் 240 என்எம் (ஆட்டோமேட்டிக்), 250 என்எம் (மேனுவல்) வெளிப்படுதுகின்றது. மேலும், 6 வேக மேனுவல் தவிர காம்பேக்ட் எஸ்யூவி பிரிவில் முதன்முறையாக கியா சோனெட் டீசல் காரில் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற உள்ளது.
கியா சொனெட் டீசல் மைலேஜ் லிட்டருக்கு 24.1 கிமீ மேனுவல் மற்றும் 19 கிமீ (ஆட்டோமேட்டிக்) ஆகும்.
1.0-litre turbo-petrol |
1.2-litre petrol |
1.5-litre diesel |
|
பவர் |
120PS |
83PS |
100PS/ 115PS |
டார்க் |
172Nm |
115Nm |
240Nm/ 250Nm |
கியர்பாக்ஸ் |
6-speed iMT/ 7-speed DCT |
5-speed MT |
6-speed MT/ 6-speed AT |
மைலேஜ் |
18.2km/l (iMT)/18.3km/l(DCT) |
18.4 km/l |
24.1km/l (MT)/19km/l(AT) |