கியா மோட்டர்ஸ் இந்தியா நிறுவனத்தின் மூன்றாவது மாடல் சோனெட் எஸ்யூவி விற்பனைக்கு செப்டம்பர் 18 ஆம் தேதி வெளியிட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது இந்த காருக்கு முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில் ரூ.25,000 கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது.
மேலும் வாசிக்க – டெக் லைன் Vs ஜிடி லைன் வித்தியாசாங்கள் ? கியா சோனெட்
சோனெட்டில் இரண்டு பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் கொண்டுள்ள இந்த காரில் 120 HP குதிரைத்திறன் மற்றும் 172 Nm முறுக்குவிசை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் உடன் 7 வேக DCT ஆட்டோமேட்டிக் மற்றும் புதிதாக வரவுள்ள ஐஎம்டி கியர்பாக்ஸ் தேர்வும் கிடைக்க உள்ளது. டர்போ-பெட்ரோல் மைலேஜ் லிட்டருக்கு 18.2 கிமீ ஐஎம்டி மற்றும் 18.3 கிமீ (ஆட்டோமேட்டிக்) ஆகும்.
83 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 115 என்எம் முறுக்குவிசை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கும். 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மைலேஜ் லிட்டருக்கு 18.4 கிமீ மேனுவல் ஆகும்.
1.5 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் அதிகபட்சமாக 115 ஹெச்பி (ஆட்டோமேட்டிக்), 100 ஹெச்பி (மேனுவல்) மற்றும் 240 என்எம் (ஆட்டோமேட்டிக்), 250 என்எம் (மேனுவல்) வெளிப்படுதுகின்றது. மேலும், 6 வேக மேனுவல் தவிர காம்பேக்ட் எஸ்யூவி பிரிவில் முதன்முறையாக கியா சோனெட் டீசல் காரில் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற உள்ளது.
கியா சொனெட் டீசல் மைலேஜ் லிட்டருக்கு 24.1 கிமீ மேனுவல் மற்றும் 19 கிமீ (ஆட்டோமேட்டிக்) ஆகும்.
1.0-litre turbo-petrol | 1.2-litre petrol | 1.5-litre diesel | |
பவர் | 120PS | 83PS | 100PS/ 115PS |
டார்க் | 172Nm | 115Nm | 240Nm/ 250Nm |
கியர்பாக்ஸ் | 6-speed iMT/ 7-speed DCT | 5-speed MT | 6-speed MT/ 6-speed AT |
மைலேஜ் | 18.2km/l (iMT)/18.3km/l(DCT) | 18.4 km/l | 24.1km/l (MT)/19km/l(AT) |