ஹூண்டாய் நிறுவனத்தின் அங்கமான கியா மோட்டார்ஸ் இந்தியா ஆலையில் கியா SP2i எஸ்யூவி சோதனை உற்பத்தியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார். முதல் மாடலாக இந்திய சந்தையில் கியா எஸ்பி2ஐ விற்பனைக்கு வரவுள்ளது.
கியா மோட்டார்ஸ் இந்தியா
ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அனந்தப்பூர் மாவடத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய கியா மோட்டார்ஸ் ஆலை 536 ஏக்கர் பரப்பளவில் ஆண்டிற்கு 3,00,000 கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக கட்டமைக்கப்பட்டு வருகின்றது.
இந்த ஆண்டின் மத்தியில் முழுமையான பயன்பாட்டுக்கு வரவுள்ள கியா மோட்டார்ஸ் நிறுவனம், முதல் வருடத்தில் உற்பத்தி எண்ணிக்கை 1 லட்சம் ஆக தொடங்க உள்ளது. அதனை தொடர்ந்து படிப்படியாக உயர்த்தப்பட்டு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு 3,00,000 கார்களை உற்பத்தி செய்ய கியா திட்டமிட்டு உள்ளது.
கொரியா நாட்டின் கியா நிறுவனம், பெட்ரோல், டீசல் கார்கள் மற்றும் எலக்ட்ரிக் கார்களை இந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்ய உள்ளது. இந்நிறுவனத்தின் 15வது சர்வதேச உற்பத்தி ஆலையாக அமைந்திருக்கின்றது. இந்த ஆலை அறிமுகத்தின் போது எலக்ட்ரிக் பவர்டெரியன் பெற்ற கியா சோல் மாடலை ஆந்திர அரசின் பயன்பாட்டுக்கு வழங்கியுள்ளது.
Kia SP2i
கடந்த 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் முதன்முறையாக காட்சிக்கு வைக்கபட்ட கியா SP கான்செப்ட் மாடலை அடிப்படையாக Kia SP2i எஸ்யூவி முதல் மாடலாக இந்திய சந்தையில் வெளியிடப்பட உள்ளது.
கியா நிறுவனத்தின் பாரம்பரிய புலியின் மூக்கை போன்ற கிரில் அமைப்பை பெற்றதாக கொண்ட பம்பரில் அமைந்துள்ள புராஜெக்டர் ஹெட்லைட் அமைப்பினை பெற்றுள்ளது. இந்த எஸ்யூவி மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷனை பெற்றிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கியா SP2i எஸ்யூவி விலை ரூ.9 லட்சம் முதல் ரூ. 16 லட்சத்தில் அமைந்திருக்கலாம்.