இந்தியாவில் கியா நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ள மற்றொரு எலெக்ட்ரிக் மாடல் EV9 GT-Line எஸ்யூவி ஆடம்பரமான வசதிகள் பெற்று ₹ 1,29,90,000 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்படுகின்ற இவி9 காரில் ஆல் வீல் டிரைவ் வசதியுடன் 99.8kWh பேட்டரி பொருத்தப்பட்டு 384 HP பவர் வெளிப்படுத்தும் இரண்டு மோட்டார் 700 Nm டார்க் வழங்குகின்றது. 0-100 km/hr வேகத்தை எட்டுவதற்கு வெறும் 5.3 வினாடிகள் போதுமானதாக உள்ளது.
EV9 காரில் 350kW DC விரைவு சார்ஜர் வரை ஆதரிக்கின்ற நிலையில் 10% முதல் 80% சார்ஜிங் பெற வெறும் 24 நிமிடங்கள் போதுமானதாகும். ARAI சான்றிதழ்படி முழுமையான சார்ஜில் 561 கிமீ ரேஞ்ச் வழங்கும் என கூறப்பட்டுள்ளது.
எலெக்ட்ரிக் குளோபல் மாடுலர் பிளாட்ஃபார்ம் (E-GMP) மூலம் வடிவமைக்கப்பட்டுள்ள EV9 காரின் அளவுகள் 4,929mm நீளம், 2,055mm அகலம் மற்றும் 1,790mm உயரம் ஆகியவற்றை பெற்றுள்ளது. இது 3,100 மிமீ வீல்பேஸ் கொண்டுள்ளது.
இன்டீரியரில் 12.3 அங்குல டிஜிட்டல் கிளஸ்ட்டர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெற்று பல்வேறு கனெக்ட்டிவிட்டி அம்சங்களுடன், அதிநவீன சொகுசு இருக்கைகளை, வசதிகளை கொண்டுள்ளது.
6 இருக்கை பெற்றுள்ள இந்த மாடலில் 10 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC), மலை இறங்க கட்டுப்பாடு மற்றும் ஆல் வீல் டிஸ்க் பிரேக்குகள். 360 டிகிரி கேமரா மற்றும் முன், பக்க மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் உள்ளன. மேலும், முன்னோக்கி மோதல் எச்சரிக்கை, லேன் மாறுபாடு எச்சரிக்கை, அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் லேன் கீப் அசிஸ்ட் உள்ளிட்ட 27 விதமான பாதுகாப்பு சார்ந்த லெவல் 2 அதிநவீன ஓட்டுநர் உதவி அமைப்பு (ADAS) கொண்டதாக வந்துள்ளது.