சீனாவின் செங்டு மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள புதிய கியா EV5 எஸ்யூவி முன்பாக காட்சிப்பபடுத்தப்பட்ட கான்செப்ட் போலவே அமைந்துள்ளது. முதலில் சீன சந்தையில் விற்பனைக்கு கிடைக்க உள்ள மாடல் இந்தியா வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி EV தினத்தில் கியா இவி5 காரின் அதிகாரப்பூர்வ விவரக்குறிப்புகளை வெளியிடும்.
Kia EV5
இந்தியாவில் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரவுள்ள EV9 காரின் அடிப்படையிலான பாக்ஸி டிசைன் அம்சங்களை பெற்ற EV5 காரில் மிக நேர்த்தியாக கொண்ட டூயல் டோன் அலாய் வீல் பெற்று 5 இருக்கைகளை பெற்றதாக அமைந்துள்ளது. பொதுவாக இவி கார்களுக்கு பயன்படுத்தப்படும் கிரில் இல்லாத பம்பர் ஆனது சேர்க்கப்பட்டுள்ளது. EV5 பரிமாணங்கள் 4,615 மிமீ நீளம், 1,875 மிமீ அகலம் மற்றும் 1,715 மிமீ உயரம், 2,750மிமீ வீல்பேஸ் கொண்டதாக இருக்கும். காரின் கெர்ப் எடை 1,870 கிலோ என குறிப்பிடப்பட்டுள்ளது.
பேட்டரி மற்றும் ரேஞ்சு தொடர்பான விபரங்களை தற்பொழுது வெளியிடப்படவில்லை. சில தகவல்களின் அடிப்படையில் BYD நிறுவன LFP (லித்தியம்-அயன் பாஸ்பேட்) பிளேட் பேட்டரி பெற்றதாக வரவுள்ள இவி5 கார் 600 கிமீ வரையிலான ரேஞ்சு வெளிப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
EV9 காரிலிருந்து பெறப்பட்ட டாஷ்போர்டு, ஸ்டீயரிங் வீல் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் தொகுப்பினை பெற்று டிரைவரின் டிஸ்ப்ளே மற்றும் சென்டர் டச்ஸ்கிரீன் ஆகியவற்றை கொண்டுள்ளது.
சீன சந்தையில் கியா EV5 அடுத்த ஆண்டின் துவக்க மாதங்களில் விற்பனைக்கு செல்ல உள்ள நிலையில், இந்திய சந்தைக்கு 2025 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது.