கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் செல்டோஸ் வெற்றியை தொடர்ந்து வெளியாக உள்ள கார்னிவல் முன்பதிவு தொடங்கப்பட்ட முதல் நாளிலே 1410 புக்கிங் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு தொகை ரூ.1,00,000 ஆகும்.
ஆட்டோ எக்ஸ்போ 2020 அரங்கில் விற்பனைக்கு வெளியாக உள்ள கியா கார்னிவல் காரில் 7 இருக்கை, 8 இருக்கை மற்றும் 9 இருக்கை என மூன்று விதமான சீட் ஆப்ஷனில் விற்பனைக்கு கிடைக்க உள்ளதை கியா உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த மாடலில் இடம்பெறக்கூடிய 2.2 லிட்டர் என்ஜின் லிட்டருக்கு 13.9 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கியா மோட்டார்ஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு கூக்கியுன் ஷிம் கூறுகையில், “கியா கார்னிவல் விற்பனை தொடங்கப்படுவதற்கு முன்பே கிடைத்த வரவேற்பை கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். முன்பதிவு தொடங்கிய ஒரே ஒரு நாளில் இந்திய சந்தையில் கியாவின் புதிய பிரசாதத்திற்காக 1,410 முன்பதிவுகளை நாங்கள் பெற்றுள்ளோம். இந்த வரவேற்பினை பெற எங்களுடைய முதல் காரின் அமோகமான வரவேற்பே ஆகும். இந்தியாவில் கியா பிராண்டின் ஆற்றலுக்கான சான்றாக புக்கிங்ள் விளங்குகின்றது. இந்தியாவில் கார்னிவல் போன்ற உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புக்கு தேவை இருந்தது என்பதும் தெளிவாகிறது. உற்பத்தியை இந்தியாவிலே மேற்கொள்ள உள்ளதால் கியா மோட்டார்ஸ் மீதும் நம்பிக்கை வைத்திருந்தவர்களை விரைவாக டெலிவரி வழங்குவதனை உறுதி செய்வதே இப்போது எங்கள் முன்னுரிமை. ” ஆகும் என குறிப்பிட்டுள்ளார்.
கியா கார்னிவல் முன்பதிவு தொகை ரூ .1 லட்சம் ஆகும். பெறப்பட்ட முன்பதிவுகளான 1,410 க்கும் மேற்பட்ட முன்பதிவுகளில், இது அதிக முன்பதிவுகளைப் பெற்ற லிமோசின் டிரிம் டாப் வேரியண்டிற்கு பதிவு செய்துள்ளனர். தோராயமாக 900 முன்பதிவுகள் லிமோசின் டிரிமுக்கு கிடைத்துள்ளது. கார்னிவல் மாடலுக்கு இந்நிறுவன கியா இந்தியா வலைத்தளம் வழியாகவோ அல்லது இந்தியாவில் உள்ள 265 டீலர்கள் மூலமாகவோ முன்பதிவு செய்யலாம்.
சக்திவாய்ந்த 200 ஹெச்பி பவரை வழங்குகின்ற பிஎஸ்6 2.2 லிட்டர், 4-சிலிண்டர், டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு 441 என்எம் டார்க் வழங்கும். இதில் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் (Sportsmatic) டிரான்ஸ்மிஷன் பெற்றதாக கிடைக்க உள்ளது. மற்றபடி மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படவில்லை
இன்னோவா கிரிஸ்டா உட்பட உயர் ரக பீரிமியம் எம்பிவி மாடல்களான பென்ஸ் வி கிளாஸ், டொயோட்டா வெல்ஃபயர் போன்ற மாடல்களை எதிர் கொள்ள உள்ள கியா கார்னிவல் எம்பிவி விலை ரூ.30 லட்சம் முதல் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. வரும் ஆட்டோ எக்ஸ்போ 2020 அரங்கில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.