இன்னோவா கிரிஸ்டா காருக்கு கடுமையான சவாலினை ஏற்படுத்தும் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்னிவல் எம்பிவி கார் ரூ.24.95 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.33.95 லட்சம் வரையிலான விலையில் வெளியிட்டுள்ளது.
என்ஜின் விபரம்
சக்திவாய்ந்த 200 ஹெச்பி பவரை வழங்குகின்ற பிஎஸ்6 2.2 லிட்டர், 4-சிலிண்டர், டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு 441 என்எம் டார்க் வழங்கும். இதில் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் (Sportsmatic) டிரான்ஸ்மிஷன் பெற்றதாக கிடைக்க உள்ளது. கியா கார்னிவல் காரின் மைலேஜ் லிட்டருக்கு 13.19 கிமீ ஆக சான்று வழங்கப்பட்டுள்ள நிலையில், ஓட்டுதலில் லிட்டருக்கு 7 கிமீ முதல் 9 கிமீ வரை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
மிகவும் சக்திவாய்ந்த டர்போ டீசல் என்ஜினின் தொடக்கநிலை பிக்கப் மற்றும் தொடர்ந்து பயணிப்பதற்கான பிக்கப் சிறப்பாக உள்ளது. அதே போல இந்த காரினை பொறுத்தவரை அதிகப்படியான நீண்ட தொலைவு பயணம், சிறப்பான சொகுசு வசதிகளையும் கொண்டுள்ளது. இந்தியாவில் கியா கார்னிவல் எம்பிவி ரக மூன்று டிரிம்களாக பிரீமியம், பிரெஸ்டீஜ் மற்றும் லிமோசைன் என கிடைக்க உள்ளது.
பிரீமியம் 7 இருக்கை – ரூ.24.95 லட்சம்
பிரீமியம் 8 இருக்கை – ரூ.25.15 லட்சம்
பிரெஸ்டீஜ் 7 இருக்கை – ரூ.28.95 லட்சம்
பிரெஸ்டீஜ் 9 இருக்கை – ரூ.29.95 லட்சம்
லிமோசைன் 7 இருக்கை – ரூ.33.95 லட்சம்
தற்போது வரை 3500 க்கு மேற்பட்ட முன்பதிவுகள் நடைபெற்றுள்ள நிலையில் 70 சதவீத முன்பதிவு டாப் வேரியண்ட் லிமோசைன் மாடலுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்னோவா கிரிஸ்டா உட்பட உயர் ரக பீரிமியம் எம்பிவி மாடல்களான பென்ஸ் வி கிளாஸ், டொயோட்டா வெல்ஃபயர் போன்ற மாடல்களை எதிர் கொள்ள உள்ள மேலும் பல நிறுவனங்களின் ஆட்டோ எக்ஸ்போ 2020 அரங்கில் உள்ளது.