Car News 5 இருக்கை பெற்ற Kia Carens விரைவில் அறிமுகம் Last updated: 7,March 2023 1:42 am IST MR.Durai Share எம்பிவி ரக சந்தையில் சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ள கியா மோட்டார் நிறுவனத்தின் Kia Carens காரின் டீசல் என்ஜின் பெற்ற மாடலில் iMT கியர்பாக்ஸ் உடன் கூடுதலாக குறைந்த விலை கொண்ட 5 இருக்கை வேரியண்ட்டை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. செல்டோஸ் காரில் முன்பே iMT கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கின்றது.Kia Carens சிறப்புகள்கியா கேரன்ஸ் காரில் Real Driving Emissions (RDE) விதிகளுக்கு ஏற்ப புதிய இரண்டு பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் ஆப்ஷனை பெற்றுள்ளது பெட்ரோல் எஞ்சின் மாடல் 1.5-லிட்டர், நான்கு சிலிண்டர், 115hp மற்றும் 144Nm வழங்குகின்றது. அடுத்தப்படியாக, 1.4-லிட்டர், நான்கு சிலிண்டர், டர்போ சார்ஜ் என்ஜின் 140hp மற்றும் 242Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இறுதியாக டீசல் எஞ்சின் 1.5-லிட்டர், நான்கு சிலிண்டர் அதிகபட்சமாக 115hp மற்றும் 250Nm ஆகும்.பெட்ரோல் எஞ்சினுடனான கியர்பாக்ஸ் விருப்பங்களில் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு DCT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் (1.4-லிட்டர் டர்போ-பெட்ரோலுக்கு மட்டும்) ஆகியவை அடங்கும். இதற்கிடையில், டீசல் எஞ்சின் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் வழங்கப்படும். இப்பொழுது கூடுதலாக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட உள்ளது.பெட்ரோல் மற்றும் டீசல் பவர் ட்ரெயின்களுடன் புதிய பேஸ் வேரியண்ட்டை அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது. கேரன்ஸ் காரில் ஐந்து இருக்கை அமைப்பையும் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது. TAGGED:Kia Carens Share This Article Facebook Previous Article எலெக்ட்ரிக் பைக் தயாரிக்க ஜீரோ உடன் ஹீரோ கூட்டணி Next Article மீண்டும் ஹோண்டா Shine 100 டீசர் வெளியீடு