Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

மே 23 ஆம் தேதி கியா காரன்ஸ் கிளாவிஸ் விலை வெளியாகும்.!

by Automobile Tamilan Team
11 May 2025, 7:42 pm
in Car News
0
ShareTweetSend

காரன்ஸ் கிளாவிஸ் எம்பிவி

வரும் மே 23 ஆம் தேதி கியா நிறுவனத்தின் புதிய காரன்ஸ் கிளாவிஸ் எம்பிவி ரக மாடலின் விலையை அறிவிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. முந்தைய மாடலை விட கூடுதல் வசதிகளை கொண்டுள்ளதால் விலை ரூ.12 லட்சத்தில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்பொழுது சந்தையில் உள்ள காரென்ஸின் வசதிகளை பகிர்ந்து கொண்டாலும் டிசைன் உள்ளிட்ட சில இடங்களில் கூடுதல் மாற்றங்களும் வசதிகள் மற்றும் பாதுகாப்பில் மேம்பட்டதாக வந்துள்ள கிளாவிஸ் காரில்  HTE, HTE(O), HTK, HTK+, HTK+(O), HTX, and HTX+ என 7 வேரியண்டுகளுடன் ADAS பெற்ற மாடலும் கிடைக்கலாம்.

Carens Clavis பற்றி சில முக்கிய தகவல்கள்

காரன்ஸ் ஒரு வேரியண்ட் மாடலாக சுருக்கப்பட்டுள்ளதால் வரவுள்ள கிளாவிஸ் ரூ.12 லட்சம் முதல் துவங்கி டாப் வேரியண்ட் ரூ.19 லட்சத்துக்குள் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் NA பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என மூன்று எஞ்சின் ஆப்ஷனை பெற உள்ளது.

6 மற்றும் 7 இருக்கைகளை பெற்றுள்ள கிளாவிஸ் காரின் இன்டீரியரில் மிகவும் சிறப்பான இடவசதியுடன் டேஸ்போர்டில் சமீபத்திய கியா கார்களில் இடம்பெற்று வருகின்ற டிஜிட்டல் கிளஸ்ட்டர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் என இரண்டும் ஒருங்கே இணைக்கப்பட்ட 26.62-இன்ச் பனோரமிக் டிஸ்ப்ளே அமைப்பினை பெற்றுள்ளது.

டூயல் பேன் பனரோமிக் சன்ரூஃப், 8-ஸ்பீக்கர் போஸ் ஆடியோ சிஸ்டம், முன் மற்றும் பின் பகுதிக்கான டேஸ்கேம், ஆம்பியன்ட் லைட்டிங், வென்டிலேட்டேட் இருக்கைகள் என பலவற்றை கொண்டுள்ளது. பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் 6 ஏர்பேக்குகளுடன் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டிட்டி கண்ட்ரோல் (ESC), VSM, BAS, HAC, DBC (டவுன்ஹில் பிரேக் கண்ட்ரோல்), ஆல் வீல் டிஸ்க் பிரேக்குகள், ரியர் பார்க்கிங் சென்சார்கள், டயர் பிரெஷர் மானிட்டர் உள்ளது. டாப் வேரியண்டில் லெவல் 2 ADAS இடம்பெற்றிருக்கும்.

Related Motor News

சிஎன்ஜி ஆப்ஷனில் வெளியான கியா காரன்ஸ் எம்பிவி சிறப்புகள்.!

கியா காரன்ஸ் கிளாவிஸில் புதிய வேரியண்டுகள் வெளியானது

ரூ.2 லட்சம் வரை சிறப்பு சலுகையை அறிவித்த கியா இந்தியா

ஜிஎஸ்டி., ரூ.4.49 லட்சம் வரை விலை குறையும் கியா கார்கள்

21,000க்கு கூடுதலான முன்பதிவுகளை கடந்த கியா காரன்ஸ் கிளாவிஸ்

விரைவில் டாக்சி சந்தைக்கு ஏற்ற கியா காரன்ஸ் கிளாவிஸ் இவி அறிமுகமாகிறது

Tags: Kia CarensKia Clavis
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

நிசானின் மேக்னைட் விலை ரூ.32,000 வரை உயருகின்றது.!

ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் என்ஜினை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

அடுத்த 18 மாதங்களில் 3 கார்களை வெளியிடும் நிசான் இந்தியா.!

நிசானின் புதிய எம்பிவி கிராவைட் ஜனவரி 2026ல் விற்பனைக்கு அறிமுகம்.!

மாருதி சுஸுகியின் வேகன்-ஆரில் ‘சுழலும் இருக்கை’ அறிமுகம்!

ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்ற டாடா சியரா எஸ்யூவி.!

அதிக மைலேஜ் தரும் கியா செல்டோஸ் ஹைபிரிட் வருகை.. எப்பொழுது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan