ஜெஎல்ஆர் எனப்படும் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் மற்றும் எஸ்யூவி மாடல்கள் விலை ரூ. 4.5 லட்சம் வரை அதிகபட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரியின் காரணமாக ஆடம்பர கார்கள் மற்றும் எஸ்யூவி-களுக்கு 43 % விதிக்கப்படுகின்றது.
ஜாகுவார் லேண்ட் ரோவர்
டாடா குழுமத்தின் அங்கமாக செயல்படுகின்ற இங்கிலாந்து நாட்டின் பாரம்பரிய பெருமை பெற்ற ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் மாடல்களின் விலை அதிகபட்சமாக ரூ. 4.50 லட்சம் வரை சரிந்துள்ளது.
ஒரே நாடு ஒரே வரி எனும் நோக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரி வதிப்பின் காரணமாக எஸ்யூவி-கள் மற்றும் ஆடம்பர சொகுசு கார்கள் விலை 1.7 சதவிகிதம் முதல் 12 சதவிகிதம் வரை குறைந்துள்ள நிலையில் இன்று முதல்ஜிஎஸ்டி அடிப்படையிலான ஜாகுவார் லேண்ட்ரோவர் மாடல்களின் எக்ஸ்-ஷோரூம் விலை வெளியிடப்பட்டுள்ளது.
ஜாகுவார் பிராண்டின் கீழ் இந்தியாவில் விற்பனையில் உள்ள மாடல்களின் விலை பின் வருமாறு ;-
ஜாகுவார் XE ஆரம்ப விலை ரூ. 34.64 லட்சம்
ஜாகுவார் XF ஆரம்ப விலை ரூ. 44.89 லட்சம்,
ஜாகுவார் F-PACE ஆரம்ப விலை 67.37 லட்சம்
ஜாகுவார் XJ ஆரம்ப விலை ரூ. 97.39 லட்சம்
லேண்ட் ரோவர் பிராண்டின் கீழ் இந்தியாவில் விற்பனையில் உள்ள மாடல்களின் விலை பின் வருமாறு ;-
லேன்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் விலை ரூ. 40.04 லட்சம் முதல் ரூ.52.88 லட்சம் வரை
லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் எவோக் விலை ரூ. 42.37 லட்சம் முதல் ரூ.56.97 லட்சம் வரை
லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் விலை ரூ. 89.44 லட்சம் முதல் ரூ.1.79 கோடி வரை
லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் விலை ரூ. 1.59 கோடி முதல் ரூ. 3.44 கோடி வரை
தற்போது ஜெஎல்ஆர் நிறுவனத்தின் அங்கிகரிக்கப்பட்ட டீலர்கள் சென்னை, கோயம்புத்தூர், டெல்லி, குர்கான், ஹைத்திராபாத், இந்தூர், ஜெய்ப்பூர், கொல்கத்தா, கொச்சி, கர்னல், லக்னோ, லூதியானா, மங்களூர், மும்பை, நாக்பூர், புனே, ராய்பூர் மற்றும் நொய்டா போன்ற இடங்களில் 25 டீலர்கள் செயல்படுகின்றது.