ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற மிகவும் பிரசத்தி பெற்ற ஜீப் ரேங்லர் ரூபிகான் எஸ்யூவி காரை இந்தியாவில் ரூ. 68.94 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டுள்ள நிலையில் மார்ச் 15 ஆம் தேதி முதல் டெலிவரி வழங்கப்பட உள்ளது.
ட்ரெயில் ரேட்டேட் பேட்ஜினை பெற்றுள்ள ரூபிகானை பொறுத்தவரை 5 கதவுகளை கொண்டு மிக சிறப்பான ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த காரில் இரண்டு ஸ்பீடு பெற்ற டிரான்ஸ்ஃபெர் கேஸ் உடன் 4:1 “4LO” லோ கியர் விகிதம் மற்றும் சிறப்பான டார்க் மேலான்மையை வழங்குகின்றது. இரு புற ஆக்சிலிலும் எலக்ட்ரானிக் டிஃப்ரென்ஷியல் லாக் வழங்கப்பட்டுள்ளது.
ரேங்க்லர் ரூபிகானை இயக்குவதற்கு 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் கொடுக்கப்பட்டு அதிகபட்சமாக 268 ஹெச்பி பவர் மற்றும் 400 என்எம் டார்க்கை உருவாக்குகிறது. இதில் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் ஜீப்பின் ராக் ட்ராக் 4X4 ஆல் வீல் டிரைவ் (AWD) அமைப்பு உள்ளது.
ரேங்லர் அன்லிமிடெட் மாடலை விட ரூ.5 லட்சம் கூடுதலான விலையில் அமைந்துள்ள ரூபிகானில் 8.4 அங்குல இன்ஃபோட்யின்மென்ட் சிஸ்டத்துன் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே, 7 அங்குல டிஜிட்டல் கிளஸ்ட்டர் போன்றவற்றை பெறுகின்றது. பாதுகாப்பு சாதனங்களை பொறுத்தவரை, நான்கு ஏர்பேக்குகள், முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார், ரிவர்ஸ் கேமரா, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC), டிரெய்லர் ஸ்வே கன்ட்ரோல் (TSC), ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ஏபிஎஸ்), ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் (HSA), ஹில் டெசண்ட் கன்ட்ரோல் (HTC), எலக்ட்ரானிக் ரோல் தணிப்பு (ERM) மற்றும் டயர் பிரஷர் மானிட்டர் போன்றவை வழங்கப்பட்டுள்ளது.