ஜீப் இந்தியா நிறுவனம் வருடாந்திர முடிவில் டிசம்பர் 2023 சலுகையாக அதிகபட்சமாக கிராண்ட் செரோக்கீ எஸ்யூவி மாடலுக்கு ரூ.11.85 லட்சம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர மற்ற மாடல்களான காம்பஸ், மெர்டியன் மாடல்களுக்கும் சலுகை அறிவித்துள்ளது.
உயர் ரக பிரீமியம் கிராண்ட் செரோக்கீ எஸ்யூவி காருக்கு அதிகபட்சமாக ரூ.11.85 லட்சம் சலுகையில் ரொக்க தள்ளுபடி உட்பட பல்வேறு சலுகைகள் உள்ளன. அடுத்தப்படியாக, மெரிடியன் ஆண்டு இறுதி தள்ளுபடியில் மொத்தம் ரூ 4.85 லட்சம் வழங்கப்படுகிறது.
ரூ. 4 லட்சம் வரையிலான ரொக்க தள்ளுபடி மற்றும் முறையே ரூ. 25,000 மற்றும் ரூ. 30,000 மதிப்புள்ள பரிவர்த்தனை மற்றும் கார்ப்பரேட் நன்மைகளை உள்ளடக்கியது.
இறுதியாக, காம்பஸ் எஸ்யூவி மாடலுக்கு ரூ.2.05 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கின்றது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள சலுகைகள் 31-12-2023 வரை மட்டுமே வழங்கப்படும். டீலர்கள், வேரியண்ட் அடிப்படையில் மாறக்கூடும். மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள அருகாமையில் உள்ள ஜீப் இந்தியா டீலரை அனுகலாம்.