வரும் ஜூலை 31ந் தேதி இந்தியாவில் களமிறங்க உள்ள ஜீப் காம்பஸ் எஸ்யூவி விற்பனைக்கு வரவுள்ளதை தொடர்ந்து காம்பஸ் பற்றி அறிந்து கொள்ளலாம்.
ஜீப் காம்பஸ் எஸ்யூவி
அமெரிக்காவின் கட்டுறுதி மிக்க பிராண்டுகளில் ஒன்றான ஜீப் நிறுவனத்தின் காம்பஸ் எஸ்யூவி கார் இந்தியாவிலே உற்பத்தி செயப்பட்டு விற்பனைக்கு வரவுள்ளதால் மிக சவாலான விலையில் பல்வேறு அம்சங்களுடன் வரவுள்ளது.
டிசைன்
ஜீப் நிறுவனத்தின் பாரம்பரிய கிரில் அமைப்புடன் கூடிய கம்பீரமான தோற்ற அமைப்பில் ஸ்டைலிஷனான ஹெட்லைட் பெற்று நேர்த்தியாக டிசைனிங் செய்யப்பட்ட கிரில்கள், பம்பர், அலாய் வீல் கொண்டதாக உள்ளது.
உட்புறத்தில் உயர்தர வசதிகளை பெற்ற டேஸ்போர்டு , சொகுசு இருக்கைகளை சிறப்பான இடைவெளி கொண்டிருப்பதுடன் அதிகப்படியான பொருட்களை எடுத்துச் செலவதற்கான பூட்டினை பெற்று விளங்குகின்றது.
எஞ்சின்
காம்பஸ் எஸ்யுவி மாடலில் 160 hp ஆற்றலுடன் 350 Nm டார்க்கினை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் மல்டிஜெட் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.
மேலும் 170 hp பவருடன், 260 Nm டார்க்கினை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் மல்டிஏர் பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது. இதில் 7 வேக டூயல் கிளட்ச் கியராபாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
இரு எஞ்சின் மாடல்களிலும் 4×4 டிரைவ் , 4×2 டிரைவ் என இருவிதமான வகைகளில் கிடைக்க உள்ளது. 4×4 பெற்ற மாடலில் தானியங்கி,பனி,மனல் மற்றும் சேறு என மொத்தம் நான்கு வகையான டிரைவிவ் மோட் இடம்பெற்றுள்ளது.
வேரியண்ட்
பேஸ் வேரியண்ட் Sport, மிட் வேரியண்ட் Longitude, Longitude(O), டாப் வேரியன்ட் Limited மற்றும் Limited(O) என மொத்தம் 3 வகையில் 5 விதமான வேரியன்ட்களில் கிடைக்க பெற உள்ளது. டாப் வேரியண்டில் ஆல் வீல் டிரைவ் , இரு வண்ண கலவை உள்ளிட்ட வசதிகளுடன் HID முகப்பு விளக்குகள், அதிகபட்சமாக 6 காற்றுப்பைகள் வரை பெறலாம்.
வசதிகள்
ஆல் வீல் டிரைவ், டிரைவிங் மோட், 6 காற்றுப்பைகள், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே போன்ற வசதிகளுடன் கூடிய யூ-கனெக்ட் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், இரு வண்ண கலவை இன்டிரியர், இரு வண்ண கலவை பெயின்ட் உள்ளிட்ட அம்சங்களுடன் கீலெஸ் கோ, ரியர்பார்க்கிங் கேமரா ஆகிய வசதிகளும் உள்ளன.
போட்டியாளர்கள்
ஹூண்டாய் டூஸான், ஹோண்டா சிஆர்-வி , எக்ஸ்யூவி500 ஆகிய எஸ்யூவி மாடல்களுக்கு நேரடி போட்டியாகவும் , ஃபார்ச்சூனர், எண்டேவர், பஜரோ போன்றவற்றுக்கும் சவாலாக காம்பாஸ் எஸ்யூவி விளங்கும்.
விலை
ரூ. 15.99 லட்சத்தில் தொடங்க உள்ள ஜீப் காம்பஸ் எஸ்யூவி டாப் வேரியண்ட் மாடல் ரூ. 22 லட்சம் விலைக்குள் அமையலாம். வருகின்ற ஜூலை 31ந் தேதி அதிகார்வப்பூர்வமாக காம்பஸ் வெளியிடப்பட உள்ள நிலையில் முன்பதிவு நடைபெற்று வருகின்றது.
jeep compass suv image gallery