இந்தியாவில் ஜீப் காம்பஸ் எஸ்யூவி வெளியிடப்பட்டு 8வது ஆண்டினை கொண்டாடும் வகையில் வருடாந்திர பதிப்பில் சிறிய டிசைன் மாற்றங்கள் மற்றும் கூடுதல் வசதிகளை சேர்த்து விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மற்றபடி, அடிப்படையான மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் கொண்டு வரப்படவில்லை. 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது. 170 HP பவரை வழங்குகின்ற இந்த எஞ்சின் ஆனது ஆறு வேகம் மேனுவல் மற்றும் ஒன்பது வேக ஆட்டோமேட்டிக் கன்வெர்ட்டர் கியர் பாக்ஸ் கொண்டு இருக்கின்றது.
பானெட்டில் Jeep Compass Anniversary Edition ஸ்டிக்கரிங் பெற்று முன்புறத்தில் உள்ள 7 ஸ்லாட் ஜீப் பாரம்பரிய கிரிலில் 6 வது கிரில் வெல்வெட் சிவப்பு நிறத்தை கொண்டிருப்பதுடன், இன்டீரியரில் வெல்வெட் சிவப்பு நிற இருக்கை, ஆனிவர்சரி பேட்ஜ் மற்றும் பல்வேறு ஆக்சஸரீஸ் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் கிடைக்கின்ற மஹிந்திரா XUV700, டாடா சஃபாரி, ஹூண்டாய் டூஸான், ஃபோக்ஸ்வேகன் டிகுவான் மற்றும் சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் ஆகியவற்றை காம்பஸ் எஸ்யூவி எதிர்கொள்ளுகின்றது.
காம்பஸ் ஆண்டு விழா பதிப்பு எஸ்யூவி விலை பட்டியல் விரைவில் அறிவிக்கப்படலாம்.