ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் புதிய முயற்சியாக எம்ஜி செலக்ட் என்ற பிரீமியம் டீலர் துவங்கப்பட்டு முதல் மாடலாக சைபர்ஸ்டெர் விற்பனைக்கு ஜனவரி மாதம் நடைபெற உள்ள பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025ல் அறிவிக்கப்பட உள்ளது.
இந்தியா வரவுள்ள மாடலின் அதிகாரப்பூர்வ தொழில்நுட்ப விபரங்கள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.
MG Cyberster
டூயல் மோட்டார் செட்டப் கொண்ட இந்த எலக்ட்ரிக் ரோட்ஸ்டெர் மாடலில் இரு மோட்டார்களும் இணைந்து அதிகபட்சமாக 510 PS பவர் மற்றும் 725Nm டார்க் வழங்குகின்றது பவர் அனைத்து சக்கரங்களுக்கும் செல்லும் வகையில் ஆல்வீல் டிரைவ் முறையில் கொடுக்கப்பட்டிருக்கின்றது.
77Kwh பேட்டரி பயன்படுத்தப்பட்ட இந்த மாடலில் 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டுவதற்கு வெறும் 3.2 வினாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்ளும் .மேலும் முழுமையான சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 580 கிலோமீட்டர் (CLTC cycle) வரையிலான ரேஞ்ச் கிடைக்கும் என உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
10.25-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரை பெற்று 7-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே மற்றும் 7-இன்ச் இன்ஃபர்மேஷன் டச்ஸ்கிரீன், டிரைவரின் இடது பக்கமாக அமைந்துள்ளது. இந்த காரில் எலக்ட்ரானிக் மூலம் இயக்கப்படும் மேல்நோக்கி திறக்கும் வகையிலான (scissor doors) கதவுகளும், ரோல் கம்பிகளுக்குப் பின்னால் மறைக்கப்பட்ட மடிப்பு மென்மையான மேற் கூரை கொண்டுள்ளது.
எம்ஜி செலக்ட் மூலம் EV, PHEV மற்றும் ஹைபிரிட் போன்ற பிரிவுகளில் ஆரம்பத்தில் நான்கு புதிய தயாரிப்புகளை கொண்டு வரவும் உள்நாட்டில் அசெம்பிள் செய்யவதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ள நிலையில் சொகுசு மாடல்களை வழங்கும் டீலர்களின் எண்ணிக்கை முதற்கட்டமாக இந்தியா முழுவதும் 12 தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய மெட்ரோ நகரங்களில் மட்டும் துவங்கப்பட உள்ளது.