இந்தியாவில் டெஸ்லா எலக்ட்ரிக் கார் தயாரிப்பாளர் முதல் மாடலாக மாடல் 3 செடான் மற்றும் மாடல் Y எஸ்யூவி என இரண்டையும் விற்பனைக்கு அடுத்த சில மாதங்களில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இந்திய சந்தையில் விற்பனை அனுமதி பெறுவதற்கான முயற்சியை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நமது சந்தைக்கு வரவுள்ள மாடல் 3 எந்த வேரியண்ட் விற்பனைக்கு வரும் என உறுதியாக தெரியவில்லை, இருந்த பொழுதும் சர்வதேச அளவில் ஸ்டான்டர்டு RWD, லாங்-ரேஞ்ச் AWD, லாங்-ரேஞ்ச் RWD மற்றும் பெர்ஃபாமென்ஸ் என நான்கு விதமாக விற்பனைக்கு கிடைத்து வருகின்றது.
மற்ற மூன்று வேரியண்டுகளின் அதிகபட்ச வேகம் மணிக்கு 201 கிமீ ஆகவும், டாப் பெர்ஃபாமென்ஸ் ரக AWD வேகம் மணிக்கு 262 கிமீ ஆக உள்ளது.
18 அல்லது 19 அங்குல அலாய் வீல் பெற்றுள்ள மாடலின் இன்டீரியரில் 15.4 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பெற்று கூடுதலாக 8 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பின்புற இருக்கையில் பெற்றுள்ளது.
இந்தியாவில் முதல் டீலரை மும்பையில் துவங்க திட்டமிட்டுள்ள டெஸ்லா அதனை தொடர்ந்து டெல்லியிலும் திறக்க திட்டமிட்டுள்ளது. ஆனால், உற்பத்தி ஆலை குறித்தான எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தற்பொழுது வரை வெளியிடவில்லை.