6 மற்றும் 7 இருக்கைகள் பெற்ற புதிய ஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் விற்பனைக்கு அடுத்த சில வாரங்களுக்குள் கிடைக்க உள்ளது. கிரெட்டா எஸ்யூவி அடிப்படையில் மூன்றாவது வரிசை இருக்கை இணைக்கப்பட்டதாகும்.
கிரெட்டாவை விட 150 மிமீ கூடுதல் வீல்பேஸ் பெற்ற அல்கசாரின் தோற்ற அமைப்பு மாறுபட்டதாக வெளிப்படுத்தும் வகையில் முன்புற கிரில், பம்பர் அமைப்பில் மாற்றங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.பக்கவாட்டு தோற்ற அமைப்பில் பெரும்பாலும் கிரெட்டா கிரில் உள்ளதை போன்றே கதவுகள், பேனல்கள் பானெட் டிசைன் அமைந்துள்ளது. அலாய் வீல் புதிய டிசைனில் கொடுக்கப்பட்டிருக்கின்றது.
சி-பில்லர் பகுதியில் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ள ஓவர் ஹேங்க் பகுதியில் கிரெட்டாவை விட நீளமாகவும், மூன்றாவது வரிசை இருக்கை அமைப்பதற்கான இடம் தாராளமாக கொடுக்கப்பட்டிருக்கும்.
அல்கசார் இன்ஜின் ஆப்ஷன்
140 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல், கூடுதலாக 115 ஹெச்பி பவர் மற்றும் 250 என்எம் டார்க் வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 6 வேக மேனுவல் உடன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டிருக்கலாம். அடுத்தப்படியாக, 159hp மற்றும் 192Nm டார்க் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதிலும் 6 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் இருக்கும்.
தற்போது இந்திய சந்தையில் கிடைக்கின்ற எம்ஜி ஹெக்டர் பிளஸ், புதிய டாடா சஃபாரி, மற்றும் வரவிருக்கும் புதிய எக்ஸ்யூவி700 ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ளது.