ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற காம்பாக்ட் எஸ்யூவி ரக மாடல் வென்யூ காரின் விலையை ரூ.5,000 முதல் அதிகபட்சமாக ரூ.12,000 வரை உயர்த்தியுள்ளது. எனவே இப்போது ரூ.6.75 லட்சம் முதல் துவங்கி ரூ.11.65 லட்சம் வரை விற்பனைக்கு கிடைக்க துவங்கியுள்ளது.
சமீபத்தில் வென்யூ காரில் ஸ்போர்ட் வேரியண்ட் விற்பனைக்கு வெளியானதை தொடர்ந்து மொத்தமாக 24 வேரியண்டுகள் கிடைத்து வந்த நிலையில் SX மற்றும் SX(O) என சில வேரியண்டுகள் நீக்கப்பட்டு இப்போது 19 வேரியண்ட் மட்டும் கிடைக்க துவங்கியுள்ளது. இதன் நேரடி போட்டியாளரான கியா சொனெட் எஸ்யூவி ரூ.6.71 லட்சத்தில் துவங்குகின்றது.
ஹூண்டாய் வென்யூ புதிய விலை பட்டியல்
வேரியண்ட் | விலை |
---|---|
1.2l 5-Speed Manual VENUE – E | ₹ 675,000 |
1.2l 5-Speed Manual VENUE – S | ₹ 746,700 |
1.2l 5-Speed Manual VENUE – S+ | ₹ 838,600 |
1.0l 6-Speed Manual VENUE – Turbo S | ₹ 852,700 |
1.0l 7-Speed DCT VENUE – DCT Turbo S | ₹ 966,700 |
1.0l 6-Speed Manual VENUE – Turbo SX | ₹ 985,700 |
1.0l IMT VENUE SX | ₹ 999,990 |
1.0l SX Dual Tone (Sport) | ₹ 1,027,060 |
1.0l 6-Speed Manual VENUE – SX(O) | ₹ 1,091,700 |
1.0l IMT VENUE SX(O) | ₹ 1,115,200 |
1.0l IMT VENUE – SX(O) Dual Tone (Sport) | ₹ 1,127,600 |
1.0l 7-Speed DCT VENUE – SX+ | ₹ 1,147,700 |
1.0l 7-Speed DCT VENUE – SX+ Dual Tone (Sport) | ₹ 1,165,100 |
1.5l 6-Speed Manual VENUE – DSL E | ₹ 816,500 |
1.5l 6-Speed Manual VENUE – DSL S | ₹ 907,500 |
1.5l 6-Speed Manual VENUE – DSL SX | ₹ 999,999 |
1.5l 6-Speed Manual VENUE – DSL SX Dual Tone (Sport) | ₹ 1,037,400 |
1.5l 6-Speed Manual VENUE – DSL SX(O) | ₹ 1,147,000 |
1.5l 6-Speed Manual VENUE – DSL SX(O) Dual Tone (Sport) | ₹ 1,159,400 |
வென்யூ இன்ஜின் ஆப்ஷன்கள்
120 HP குதிரைத்திறன் மற்றும் 172 Nm முறுக்குவிசை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் கப்பா T-GDI என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த என்ஜினில் 7 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோ மற்றும் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை இந்த என்ஜின் மட்டும் பெற்றுள்ளது.
வென்யூ 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மைலேஜ் லிட்டருக்கு 18.27 கிமீ (மேனுவல்) மற்றும் லிட்டருக்கு 18.15 கிமீ (ஆட்டோமேட்டிக்) ஆகும்.
இரண்டாவதாக உள்ள பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் உள்ள ஹூண்டாய் ஐ20 காரில் இடம்பெற்றுள்ள அதே என்ஜினை கொண்டுள்ள வெனியூவில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் 1.2 லிட்டர் நான்கு சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு 83 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 115 என்எம் முறுக்குவிசை வெளிப்படுத்துகிறது. வென்யூ 1.2 லிட்டர் பெட்ரோல் மைலேஜ் லிட்டருக்கு 17.52 கிமீ (மேனுவல்).
புதிய 1.5-லிட்டர் VGT டீசல் என்ஜினைப் பொறுத்தவரை, 113 பிஹெச்பி மற்றும் 250 என்எம் டார்க்கை உருவாக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், 6 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6-ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர் பொருத்தப்பட்டுள்ளது. டீசல் மாடல் வெறும் 11.5 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை பெற முடியும். செல்டோஸ் டீசல் கார் மைலேஜ் 17.8 கிமீ (AT) மற்றும் 20.8 கிமீ (MT) ஆகும்.
web title : Hyundai Venue price hiked; new price list added