உலகில் பல்வேறு தயாரிப்பு நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க தொடங்கியுள்ள நிலையில், கொரியா தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் நிறுவனமும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் அடுத்தாண்டு அறிமுகம் செய்ய உள்ள முதல் எலக்ட்ரிக் எஸ்யூவிகளை கோனா என்று அழைக்கிறது. விரைவில் கோனா வாகனங்கள் அறிமுகமாக உள்ள நிலையில், இதை விட அளவில் சிறிய இரண்டாவது எலக்ட்ரிக் வாகனம் ஒன்றை ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.
ஹூண்டாய் நிறுவனத்தின் கோனா வரும் 2019ம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாடிக்கையாளர்களிடம் இருந்து கிடைக்கும் வரவேற்பை பொருத்து இந்த கார்கள் அதிகளவில் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்படும் என்றும் இந்தியாவில் இந்த கார்களை கொண்டு வர அடுத்த மூன்று ஆண்டுகளில் இதற்காக 7000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய 9 வாகனங்களையும் வரும் 2021ம் ஆண்டுக்குள் அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது, இந்த 9 வாகனங்களில் இரண்டு எலக்ட்ரிக் வாகனங்களும் அடங்கும். இந்த கார்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டால், அது ஃபோர்டு ஈகோஸ்போர்ட், டாடா நெக்ஸோன் மற்றும் மாருதி விட்டாரா ப்ர்ஸ்சா கார்களுக்கு போட்டியாக இருக்கும்.