ஏப்ரல் 1, 2020 முதல் நடைமுறைக்கு வரவுள்ள பிஎஸ்6 ஹூண்டாய் சான்ட்ரோ பெட்ரோல் என்ஜின் கொண்ட மாடல் அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வெளியாக உள்ள நிலையில் விலை விபரமும் சமீபத்தில் கிடைக்கப் பெற்றுள்ளது.
தற்போது விற்பனைக்கு கிடைத்து வருகின்ற 1.1 லிட்டர் பெட்ரோல் என்ஜினை போல பவரை வழங்குகின்றது. பிஎஸ் 6 ஆதரவு பெற்ற 1.1 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 69hp பவர் மற்றும் 99Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் 5 வேக ஏஎம்டி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
பிஎஸ்6 மேம்பாட்டை தவிர வேறு எந்த மாற்றங்களும் பெறாத சான்ட்ரோ காரின் விலை ரூபாய் 22,000 முதல் அதிகபட்சமாக ரூபாய் 27,000 வரை விலை உயர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுதவிர, விற்பனையில் கிடைக்கின்ற ஆஸ்டா வேரியண்டினை பின்பற்றி ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட மாடல் டாப் வேரியண்டாக கிடைக்கலாம்.
புதிய பிஎஸ் ஆதரவு என்ஜினை பெற்ற ஹூண்டாய் சான்ட்ரோ ஆரம்ப விலை ரூ. 4.57 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.6.25 லட்சம் வரை எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணையிக்கப்பட உள்ளது.