ஜெர்மனியில் நர்பர்கிங் பந்தய சாலையில் இறுதிகட்ட சோதனை ஓட்டத்தில் உள்ள நிலையில், Ioniq 5 N மாடல் 10,000 கிமீ கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தி வருகின்றது. மேலும் 10,000 கிமீ தூரத்திற்கு சோதனை செய்ய இநிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஐயோனிக் 5 என் ஜூலை 13 அன்று இங்கிலாந்தில் நடக்கும் குட்வுட் ஃபெஸ்டிவல் ஆஃப் ஸ்பீடில் உலகளவில் அறிமுகமாகும்.
ஆனால், பேட்டரி பெர்ஃபாமென்ஸ் தொடர்பான எந்த விபரங்களும் வெளியாகவில்லை. e Electrified-Global Modular Platform (E-GMP) வடிவமைக்கப்பட்டுள்ள காரில் N பேட்டரி ப்ரீகண்டிஷனிங் மற்றும் N ரேஸ் ஆகியவற்றை கொண்டுள்ளது. முந்தைய பேட்டரி வெப்பநிலையை மேம்படுத்த உதவும்.
N ரேஸில் இரண்டு முறைகள் பெற்றதாக ஸ்பிரிண்ட் மற்றும் எண்டூரன்ஸ் கொண்டுள்ளது. இதில் வெப்பநிலையை கட்டுப்படுத்தும் வகையில் மின்சாரம் வழங்கப்படுவதை மாற்றும். N ஆக்டிவ் சவுண்ட் + எட்டு ஸ்பீக்கர்கள் மற்றும் இரண்டு வெளிப்புற ஸ்பீக்கர்களுடன் 10 ஸ்பீக்கர் அமைப்பைக் கொண்டிருக்கலாம். பெரிய 400மிமீ டிஸ்க் பிரேக்குகளைப் பெறலாம்.