ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்து வருகின்ற i20 காரில் கூடுதலாக ஸ்போர்ட்ஸ் (O) வேரியண்ட் ஆரம்ப விலை ரூ.8.73 லட்சம் முதல் ரூ.9.78 லட்சம் வரை கிடைக்கின்றது.
ஏற்கனவே சந்தையில் உள்ள ஆஸ்டா டாப் வேரியண்ட் மற்றும் ஸ்போர்ட்ஸ் வேரியண்ட் என இரண்டுக்கும் இடையில் கூடுதலாக எலக்ட்ரிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜர் மற்றும் லெதேரேட் ஆர்ம்ரெட் கொண்டதாக வந்துள்ளது. மற்றபடி எவ்விதமான மாற்றங்களும் இல்லை.
ஹூண்டாய் i20 காரில் 82bhp மற்றும் 115Nm வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் பெற்று 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் IVT மேனுவல் உள்ளது. புதிய டூயல் டோன் கொண்ட சாம்பல் மற்றும் கருப்பு தீம் பெற்ற டேஸ்போர்டு அரை-லெதரெட் இருக்கை வடிவமைப்பு பெற்றுள்ளது.
ஸ்போர்ட் வேரியண்ட்டை விட கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ள வசதியின் காரணமாக ரூ.35,000 வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
- i20 Sportz (O) Manual Rs. 8,72,800
- i20 Sportz (O) Dual Tone Manual Rs. 8,87,800
- i20 Sportz (O) Automatic Rs. 9,77,800