ரூ.7,50,700 ஆரம்ப விலையில் ஹூண்டாய் நிறுவனத்தின் இரட்டை சிஎன்ஜி சிலிண்டர் நுட்பம் Hy-CNG Duo பயன்படுத்தப்பட்டு எக்ஸ்டர் EX வேரியண்ட் வெளியாகியுள்ளதால் மொத்தமாக தற்பொழுது 9 விதமான வகையில் கிடைக்கின்றது.
ஆரம்ப நிலை வேரியண்டில் வெளியிடப்பட்டிருந்தாலும், 6 ஏர்பேக்குகள், 10.67 செமீ வண்ண TFT MID உடனான டிஜிட்டல் கிளஸ்ட்டர், H-LED டெயில் விளக்குடன் ஓட்டுநர் இருக்கையை சரி செய்வதுடன் கூடுதலாக கீலெஸ் என்டரி போன்ற வசதிகளை பெற்றுள்ளது.
எக்ஸ்டரின் சிஎன்ஜி வேரியண்டில் தொடர்ந்து 69PS பவர் மற்றும் 95NM டார்க் வெளிப்படுத்தும் 1.2லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜினை கொண்டு சிஎன்ஜி பயன்முறையில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டு மைலேஜ் 27.1 km/kg ஆக சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.
குறிப்பாக, டாடா மோட்டார்சின் பஞ்ச் எஸ்யூவிக்கு எதிராக விற்பனை செய்யப்படுகின்ற எக்ஸ்டர் காரின் விலை ரூ.6,20,700 முதல் ரூ.10,50,700 வரை (எக்ஸ்-ஷோரூம்) கிடைக்கின்றது.