இந்தியாவில் சிறப்பு பதிப்பாக ஹூண்டாய் க்ரெட்டா ஸ்போர்ட்ஸ் எடிசன் பல்வேறு கூடுதலான வசதிகளை கொண்டதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விற்பனையில் உள்ள SX வேரியண்டை அடிப்படையாக கொண்ட கிரெட்டா ஸ்போர்ட்ஸ் எடிசன் மாடலில் ஆட்டோமேட்டிக் ஏசி கட்டுப்பாடு, உயரத்தை சரிசெய்யக்கூடிய ஓட்டுநரின் இருக்கை, ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதியுடன் கூடிய 7.0 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜிங் போன்றவற்றுடன் பல்வேறு அம்சங்களை பெற்றுள்ளது.
1.6 லிட்டர் பெட்ரோல் 123 ஹெச்பி பவர் மற்றும் 151 என்எம் டார்க் வெளிப்படுத்தும். 1.6 லிட்டர் டீசல் என்ஜின் 128 ஹெச்பி பவர் மற்றும் 260 என்எம் டார்க்கினை வழங்குகின்றது. இரண்டிலும் 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. ஆனால் ஸ்போர்ட்ஸ் எடிசன் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக மட்டும் வந்துள்ளது.
குறிப்பாக கிரெட்டா ஸ்போர்ட்ஸ் பதிப்பில் தோற்ற அமைப்பில் உள்ள முக்கிய சிறப்பம்சங்கள் புரொஜெக்டர் ஹெட்லைட்டிற்கு ஸ்மோக்டு எஃபெக்ட், முன்புற கிரிலுக்கு கருப்பு நிறத்துடன் குரோம் பூச்சு, சில்வர் ரூஃப் ரெயில், ஸ்கிட் பிளேட், குரோம் நிறத்தில் சைலென்சர், கருப்பு நிறத்தில் ரியர்வியூ கண்ணாடி மேற்பகுதி மற்றும் ரியர் ஸ்பாய்லர் போன்றவை பெற்றுள்ளது.
கிரெட்டா ஸ்போர்ட்ஸ் எடிசனில் இன்டிரியருக்கு கருப்பு நிறம், ‘கிரெட்டா’ என பொறிக்கப்பட்ட லெதர் இருக்கைகள், ஸ்டீயரிங் மற்றும் கியர் லீவர் பூட், ஏசி வென்ட்டை சுற்றி சல்வர் ஃபினிஷ் மற்றும் எலக்ட்ரிக் சன்ரூஃப் கொண்டுள்ளது.
சாதாரண க்ரெட்டா SX வேரியண்டை விட அதிகபட்சமாக ரூ.60,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஹூண்டாய் க்ரெட்டா ஸ்போர்ட்ஸ் எடிசன் விலை ரூ. 12.78 லட்சம் (பெட்ரோல்) மற்றும் டீசல் மாடல் விலை ரூ.14.13 லட்சம் ஆகும்.
(எக்ஸ்ஷோரூம்)