இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்துள்ள 2024 கிரெட்டா எஸ்யூவி மாடலை தொடர்ந்து பெர்ஃபாமென்ஸ் ரக கிரெட்டா N-line எஸ்யூவி காரின் படங்கள் விளம்பர பிரசாரத்திற்க்கான படப்படிப்பில் இருந்து கசிந்துள்ளது.
ரூ.11 லட்சம் முதல் ரூ. 20.15 லட்சம் வரை விற்பனைக்கு கிடைக்கின்ற புதிய கிரெட்டா எஸ்யூவி மாடலை தொடர்ந்து டர்போ பெட்ரோல் என்ஜின் பெற்று பல்வேறு ஸ்டைலிஷான மாற்றங்கள் மற்றும் பெர்ஃபாமென்ஸ் ரீதியாக சில மேம்பாடுகளை பெற்று கிரெட்டா என்-லைன் சந்தைக்கு வரவுள்ளது.
கிரெட்டா டாப் வேரியண்ட் அடிப்படையில் வரவுள்ள என் லைன் மாடலில் ப்ளூ மற்றும் கார்பன் ஸ்டீல் என இரு நிறங்களின் படங்கள் கிடைத்துள்ளது. முகப்பு தோற்ற அமைப்பில் ஸ்டைலிஷான மாற்றங்களை பெறும் வகையில் முகப்பு கிரில் அமைப்பு முற்றிலும் மாற்றப்பட்டு பல்வேறு இடங்களில் சிவப்பு நிறம் சேர்க்கப்பட்டு தொடர்ந்து எல்இடி பார், எல்இடி ஹெட்லைட் கொண்டதாக அமைந்துள்ளது.
பின்புறத்தில் மாற்றியமைக்கப்பட புதிய பம்பர் மற்றும் எல்இடி டெயில் லைட் பார் மற்றும் டெயில் கேட் லைட் உள்ளது. பக்கவாட்டில் 17 அங்குல வீலுக்கு பதிலாக N லோகோ பெற்ற 18 அங்குல அலாய் வீல் பெற்றுள்ளது.
இன்டிரியர் அமைப்பில் கருமை நிற டேஸ்போர்டு மற்றும் கூடுதலாக இருக்கைகள் என பல்வேறு இடங்களில் சிவப்பு நிறத்தை கொண்டிருப்பது உறுதியாகியுள்ளது.
புதிய கிரெட்டா என்-லைன் வேரியண்டில் 1.5 லிட்டர் GDI டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 160 bhp மற்றும் 253 Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 7 வேக DCT ஆட்டோ கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். இந்த மாடலின் மைலேஜ் லிட்டருக்கு 18.4 Kmpl ஆகும்.
விற்பனைக்கு அடுத்த சில வாரங்களுக்குள் எதிர்பார்க்கப்படுகின்ற ஹூண்டாய் கிரெட்டா என்-லைன் விலை ரூ.21 லட்சத்தில் துவங்க வாய்ப்புகள் உள்ளது.
image source – https://www.instagram.com/autonation_india/