விற்பனையில் உள்ள ஹூண்டாய் கிரெட்டாவின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள பெர்ஃபாமென்ஸ் ரக என்-லைன் காரின் புகைப்படங்களை ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், தற்பொழுது டீலர்களுக்கு டெலிவரி துவங்கப்பட்டுள்ளதால் விலை அறிவிக்கப்பட்ட உடனே டெலிவரி துவங்கப்பட உள்ளது.
கிரெட்டா என்-லைனில் இடம்பெறுகின்ற கருப்பு, அட்லஸ் வெள்ளை, டைட்டன் கிரே மேட் , மேற்கூறை கருமை நிறத்தை பெற்ற அட்லஸ் வெள்ளை, கிரே, மற்றும் ப்ளூ என 6 நிறங்களில் கருப்பு நிறத்தை பெற்ற மாடல் டீலருக்கு வந்துள்ளது.
இந்த காரில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 253 Nm டார்க் மற்றும் 160 hp பவரை வழங்குவதுடன் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக DCT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை பெற்று N8 மற்றும் N10 என இரு வேரியண்ட் ஆப்ஷனை உள்ளது.
முழுமையான கருப்பு நிறத்துடன் பல்வேறு இடங்களில் சிவப்பு நிற இன்ஷர்ட்டுகளை பெற்று என்-லைன் பேட்ஜ் ஆனது ஒரு சில இடங்களில் பெற்று 10.25 இரட்டை திரை ஆனது இந்த காருக்கு கொடுக்கப்பட்டு ஒன்றில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றொன்றில் டிஜிட்டல் கிளஸ்ட்டர் வழங்கப்பட்டிருக்கின்றது.
தற்பொழுது விற்பனையில் கிடைக்கின்ற 2024 ஹூண்டாய் கிரெட்டா மாடலின் டாப் வேரியண்ட் விலை ரூ.20.14 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) விலையில் உள்ளதால் இந்த மாடலை விட ரூ.40,000 முதல் ரூ.60,000 வரை விலை கூடுதலாக துவங்க வாய்ப்புள்ளது.
image – indianspeedzone