ஹூண்டாய் இந்தியாவின் புதிய கிரெட்டா என் லைன் காரின் இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் தொடர்பான அனைத்து படங்களும் தற்பொழுது வெளியாகி உள்ள அனைத்தையும் தற்போது தொகுத்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
2024 Hyundai Creta N-line
தோற்ற அமைப்பில் மிக நேர்த்தியான டிசைன் கொண்டு மாறுபட்ட கிரில் அமைப்பானது விற்பனையில் உள்ள கிரெட்டா எஸ்யூவி மாடலை விட மாறுபட்டதாக அமைந்திருக்கின்றது பல்வேறு இடங்களில் சிவப்பு நிறம் இன்ஷர்ட்டுகள் ஆனது கொடுக்கப்பட்டு கவர்ச்சிகரமான தோற்ற அமைப்பினை ஏற்படுத்துகின்றது.
இன்டீரியரை பொறுத்தவரை புதுப்பிக்கப்பட்ட கருப்பு நிறம் முழுமையாக கொடுக்கப்பட்டு மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட அமைப்பில் பல்வேறு இடங்களில் சிவப்பு நிறம் ஆனது கொடுக்கப்பட்டிருக்கின்றது.
மூன்று ஸ்போக் ஸ்டீயரிங் வீல், மெட்டல் பெடல், புதிய கியர் லிவர், சிவப்பு நிற ஆம்பியன்ட் விளக்குகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றது.
டேஸ்போர்டில் 10.25 டூயல் ஸ்கிரீன் ஆனது இந்த காருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது இன்ஃபோடையின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் கிளஸ்ட்டர் வழங்கப்பட்டிருக்கின்றது. மேலும், வெண்டிலேட்டட் முன்புற சீட், பவர் இருக்கைகள், Level 2 ADAS பாதுகாப்பு அம்சங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றது. 70 க்கும் மேற்பட்ட புளூலிங்க் கனெக்டேட் கார் டெக்னாலஜியும் இணைக்கப்பட்டிருக்கின்றது.
கிரெட்டா என்-லைன் எஞ்சின் விபரம்
கிரெட்டாவின் டாப் வேரியண்டில் உள்ள 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்டு 253 Nm டார்க் மற்றும் 160 hp பவரை வழங்குவதுடன் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக DCT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை பெற உள்ளது.
கிரெட்டாவின் என்-லைன் வேரியண்ட் மற்றும் நிறங்கள்
N8, மற்றும் N10 என இரு வேரியண்டுகளை பெற உள்ள இந்த காரில் கருப்பு, அட்லஸ் வெள்ளை, டைட்டன் கிரே மேட் ஆகிய ஒற்றை நிறங்களை பெற்றுள்ளது. டூயல் டோன் விருப்பங்களில் மேற்கூறை கருமை நிறத்தை பெற்ற அட்லஸ் வெள்ளை, கிரே, மற்றும் ப்ளூ என மொத்தமாக 6 நிறங்களை பெற உள்ளது.
தற்பொழுது ரூ.25,000 வசூலிக்கப்பட்டு கிரெட்டா என்-லைன் காருக்கு முன்பதிவு நடைபெற்று வருகின்ற நிலையில் விற்பனைக்கு மார்ச் 11 ஆம் தேதி விலை அறிவிக்கப்பட உள்ளது.