வரும் 16 ஜனவரி 2024 விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள 2024 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி காரின் படங்கள் முழுமையாக வெளியிடப்பட்டுள்ளது. மிகவும் புதுப்பிக்கப்பட்ட கிரெட்டாவில் மூன்று விதமான என்ஜின் கொண்டுள்ளது.
கிரெட்டா எஸ்யூவி காரில் E, EX, S, S(O), SX, SX Tech, மற்றும் SX(O) மொத்தமாக 7 விதமான வேரியண்ட் அடிப்படையில் வரவுள்ளது.
2024 Hyundai Creta SUV
இந்திய சந்தையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பாக வெளியிடப்பட்ட கிரெட்டா எஸ்யூவி தற்பொழுது வரை 9.50 லட்சத்துக்கும் கூடுதலான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ள நிலையில் புதிய கிரெட்டா விற்பனைக்கு வெளியான உடனே டெலிவரி வழங்க திட்டமிட்டுள்ளது.
புதிய 2024 ஹூண்டாய் கிரெட்டா காரில் குரோம் பாகங்களுடன் புதுப்பிக்கப்பட்ட அலுமினிய பேனல்களுடன் கருப்பு நிற ஃபினிஷ் மற்றும் எல்இடி ஹெட்லைட் ரன்னிங் விளக்குடன் எல்இடி பார் லைட் மற்றும் எல்இடி ஹெட்லைட் கொடுக்கப்பட்டு, பின்புறத்தில் எல்இடி லைட் பார் மற்றும் புதுப்பிக்கப்பட்ட டெயில்-லேம்ப் வடிவமைப்பு ஆகியவை கொண்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட புதிய 16 அங்குல அலாய் வீல் பெற்றுள்ளது.
புதிய கிரெட்டாவின் 1.5 லிட்டர் Mpi பெட்ரோல், 160 hp பவர் வெளிப்படுத்தக்கூடிய 1.5 லிட்டர் GDi டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் U2 CRDi டீசல் என மூன்று விதமான ஆப்ஷனை கொண்டதாக வரவிருக்கின்றது.
அட்லஸ் ஒயிட் கருப்பு நிறத்துடன் எமரால்டு பேர்ல் (புதிய), ஃபியரி ரெட், ரேஞ்சர் காக்கி, அபிஸ் பிளாக், அட்லஸ் ஒயிட் மற்றும் டைட்டன் கிரே ஆகிய நிறங்களுடன் கிடைக்கின்றது. டூயல் டோன் ஆனது டாப் வேரியண்ட்டில் மட்டுமே பெற்றுள்ளது.
கியா செல்டோஸ் உட்பட டொயோட்டா ஹைரைடர், மாருதி கிராண்ட் விட்டாரா, ஃபோக்ஸ்வேகன் டைகன், ஹோண்டா எலிவேட், எம்ஜி ஆஸ்டர், டாடா ஹாரியர் மற்றும் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் உள்ளிட்ட மாடல்களை ஹூண்டாய் கிரெட்டா 2024 எதிர்கொள்ளுகின்றது.