வரும் ஜனவரி 17 ஆம் தேதி விலை அறிவிக்கப்பட உள்ள ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில் இடம்பெற்றுள்ள முக்கிய வசதிகள் மற்றும் பவர் தொடர்பான விபரங்கள் என அனைத்தும் வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே, க்ரெட்டா எலெக்ட்ரிக் அறிமுகம் செய்யப்பட்டு பேட்டரி தொடர்பான விபரங்கள் மற்றும் புக்கிங் நடைபெற்று வரும் நிலையில் தற்பொழுது அனைத்து தொழில்நுட்பம் சார்ந்த தகவல்களை ஹூண்டாய் வெளியிட்டுள்ளது.
க்ரெட்டா பவர் விபரம்
473 கிமீ ரேஞ்ச் வழங்கும் 51.4 kWh பேட்டரி கொண்ட டாப் மாடல் அதிகபட்சமாக 126 kW (171 PS) பவர் மற்றும் குறைந்த விலை பெற்ற 390 கிமீ ரேஞ்ச் தரவல்ல 42 kWh பேட்டரி மாடல் 99 kW (135 PS) வெளிப்படுத்துகின்றது. ஆனால் டார்க் தொடர்பாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. சார்ஜிங் தொடர்பாக 42Kwh பேட்டரி உள்ள மாடலுக்கு 11 kW ஏசி வீட்டு சார்ஜர் முறையில் 10-100% பெற 4 மணி நேரம் போதுமானதாகும். இதுவே 60KW DC விரைவு சார்ஜரை பயன்படுத்தினால் 58 நிமிடங்கள் மட்டும் தேவைப்படும்.
ஆனால், தற்பொழுது 51.4 kWh பேட்டரி மாடலின் சார்ஜிங் விபரம் அறிவிக்கப்படவில்லை.
பாதுகாப்பு சார்ந்த வசதிகள்
ADAS மூலம் பெறப்படும் வசதிகளில் 19 விதமான பாதுகாப்பு அம்சங்கள் கொடுக்கப்பட்டு, அடிப்படையாக அனைத்து வேரியண்டிலும் 6 ஏர்பேக்குகள், அனைத்து வீலிலும் டிஸ்க் பிரேக்குகள், ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக்குகள், ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் கன்ட்ரோல் மற்றும் ஹில் டிசென்ட் கண்ட்ரோல் (HDC), வாகன நிலைப்புத்தன்மை மேலாண்மை (VSM) உடன் மின்னணு நிலைப்புத்தன்மை கட்டுப்பாடு (ESC) , குழந்தை இருக்கை நங்கூரம் (ISOFIX), டயர் அழுத்தம் கண்காணிப்பு அமைப்பு போன்றவை உள்ளது.
என பல்வேறு விதமான பாதுகாப்புகளுடன் உறுதியான ஸ்டீல் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள க்ரெட்டாவில் 75 விதமான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளது.
சிறப்பு வசதிகள்
ADAS உடன் இணைந்த ரீஜெனரேட்டிவ் பிரேக் சிஸ்டம் கொண்டுள்ளதால் முன்னதாக செல்லும் வாகனத்திற்கு ஏற்ப ரீஜென் முறை அட்ஜெஸ்ட் செய்து கொண்டு பவரை சேமிக்கும், இதனால் சிறப்பான வகையில் ரேஞ்ச் அதிகரிக்கும்.
காருக்குள் இருந்தவாறு 1,150 சார்ஜிங் நிலையங்களில் In-car Payment முறையை பயன்படுத்தலாம், ஐ-பெடல் நுட்பம், V2L, டிஜிட்டல் கீ, ஸ்விஃப்ட் பை வயர் சிஸ்டம் என பல்வேறு நவீன அம்சங்களை கொண்டுள்ளது. இதுதவிர ஹூண்டாய் ப்ளூலிங் மூலம் சுமார் 70க்கு மேற்பட்ட கனெக்ட்டிவிட்டி வசதிகளும் உள்ளது.